பொன்மலை, பொன்மலைப் பட்டி தொடர் – திருத்தம்

காதில் விழுந்த வரலாறு - வாசகர்களின் கருத்து

0
full

திருத்தம்.

கடந்த இதழில் பொன்மலை பகுதி – 3, பொன்மலைப் பட்டி பற்றிய காதில் விழுந்த வரலாறு என்னும் கட்டுரைத் தொடரில் பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன் விவரம்:

1986இல் நடைபெற்ற பொன்மலை நகராட்சித் தேர்தலில், பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் கருணாநிதி உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பொதுக்கூட்டம் பொன்மலைப்பட்டியில் நடைபெறவில்லை. பொன்மலை நகராட்சிக்குட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்றது.

poster

மேலும் அந்த நகராட்சித் தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்டவர் கடலைமிட்டாய் இராமசாமி இல்லை. போட்டியிட்டவர் பொன்மலை திமுக நகரச் செயலாளர் இராமானுசம். கடலைமிட்டாய் இராமசாமி அதிமுகவின் சார்பில் போட்டியிட்டே வெற்றிபெற்றார். திமுவில் அல்ல.

திமுகவின் கூட்டணிக் கட்சியில் பொன்மலை நகர மன்றத் தலைவர் பதவி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் CPM கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. CPI கட்சிக்கே ஒதுக்கப்பட்டது. CPIயில் போட்டியிட்டவர் பீட்டர் அல்போன்ஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ukr

இந்தத் திருத்தங்களை அலைபேசி வழியாகத் தெரிவித்த கொட்டப்படு இரமேஷ், புலனம் வழியாக திருத்தங்களை கூறிய பொன்மலை மறுமலர்ச்சி இரயில்வே தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் பா.இராசுக்குமார் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நன்றி – 1 – பொன்மலை நீலமேகம்

பொன்மலை பகுதி -1, பகுதி – 2, பகுதி – 3 ஆகிய தொடர் கட்டுரைக்குச் செய்திகள் பலவற்றையும் அளித்துதவியர் பொன்மலை நீலமேகம். இவரின் குடும்பத்தினர் ஒரு நூற்றாண்டு காலம் பொன்மலைப்பட்டியில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவருடைய தந்தையார் சின்னச்சாமி இரயில்வே தொழிற்சங்கத்தின் தென்னிந்தியாவின் தலைவராகத் திகழ்ந்தவர். நீலமேகம் தண்ணீர் என்னும் சூழலியல் அமைப்பு திறம்பட நடத்தி வருகிறார். மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அமைப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். தற்போது இரயில்வே தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

நன்றி – 2 – தமிழாசிரியர் சாலமன் தனராசு

பொன்மலைப்பட்டியின் வரலாற்றை நமக்குத் துல்லியமாக வழங்கியவர். பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்திய பெண்மணி ஒருவர்தான் 1971-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்ற தகவலை தந்தார். இவர் 1969 முதல் கடந்த 50 ஆண்டு காலம் பொன்மலைப்பட்டியில் வாழ்ந்து வருகிறார். மேலும் ஐயா சாலமன் தனராசு பொன்மலை இரயில்வே இருபாலர் பள்ளியில் உதவி தலைமையாசிரியராகவும் தமிழாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் என்திருச்சியின் வரலாற்று கட்டுரைத் தொடருக்கு நம் முயற்சியைப் பாராட்டி நடந்தாய் வழி திருச்சிராப்பள்ளி என்னும் ஒரு வரலாற்று ஆவண நூலை நமக்குக் படிக்கக் கொடுத்துள்ளார். 1967-இல் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விழா சென்னை இராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்டு அண்ணா பதவியேற்றதைக் கண்டு மகிழ்ந்த மிகச் சிலரில் இவரும் ஒருவர் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.