விளம்பரத் துறையினையும் வென்றெடுத்த பெண்மணி

0

இன்றைய டே பை டே அப்டேட் காலத்தில் பெண்கள் முன்னேறி வருவது அவ்வளவு பெரிது இல்லை.

ஆனால் எப்படிப்பட்ட துறையில் இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து அவர்கள் முன்னேறி வருகிறார்கள் என்னும் போது அது வியப்பை தருகின்றது,.! அனைவரையும் திரும்பி பார்க்கவும் தூண்டுகின்றது.
அப்படி நம்மை திரும்பி பார்க்க தூண்டிய பெண்களில் ஒருவர் தான் காமினி.

விளம்பரங்கள் – அது ஒரு தனி உலகம்.விளம்பரங்களில் பெண்கள் பலர் நடித்து வியக்க வைக்கின்றனர். ஆனால் விளம்பரத்தைதத் தானே சென்று வாங்கி அதை டிசைன் செய்து சிறப்பாக வெளியிட்டும் வருகிறார் காமினி,தொடர்ந்து அவரிடம் பேசினோம்.

‌சந்தா 1

ரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் சொந்த முயற்சியில் சிறிஷ்டி (shrishti) எனும் விளம்பர நிறுவனம் நடத்திக்கொண்டு வருகிறேன்.

எப்படி விளம்பர துறையை தேர்வு செய்தீங்க ?
எனக்கு சொந்த ஊர் சென்னை. பி.காம் முடித்தவுடன் எனக்கு வேலை கிடைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். சில எக்ஸ்ட்ரா கோர்ஸசும் படிச்சிருக்கேன். அம்மா -ஜெயலெஷ்மி. அப்பா-கே.எஸ்.கண்ணன். அப்பா இந்து பத்திரிகையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது இந்துவில் இண்டர்வியூ நடந்தது, அதில் நானும் என் தோழியும் கலந்துகொண்டு தேர்வானோம். எங்கள் இருவருக்கும் திருச்சியில் போஸ்டிங் கிடைத்தது. எனக்கு விளம்பரத்துறையில் வேலை கிடைத்தது, இருவரும் திருச்சிக்கு கிளம்பி வந்தோம். திருச்சியில் ரூம் எடுத்து தங்கினேன்.

எனக்கு விளம்பத்துறை பற்றி ஒன்னும் தெரியாது. படிப்படியாக கற்றுக்கொண்டேன், பார்த்தவுடனே சிலவற்றை மனதில் பதிய வைத்து கற்றுக்கொண்டேன். சிறிது நாட்களிலேயே யாராவது வேலையை சரியாக செய்யவில்லைன்னா அதை சரிபார்த்து திருத்தம் செய்யும் நிலைக்கு உயர்ந்தேன். விளம்பரத்துறை தவிர பிறவற்றிலும் நன்கு செயல்பட துவங்கினேன்.

சந்தா 2

எப்படி சிறிஷ்டி எனும் விளம்பர நிறுவனம் வைக்கும் ஐடியா வந்தது? எப்படிப்பட்ட பணிகள் செய்வீர்கள்?

பத்திரிகையில் பணிபுரியும் போதே எனக்கு திருமணம் ஆகிற்று. 2 குழந்தைகள் உள்ளனர்,குழந்தைகளை கவனிக்க என் பணியை விட்டேன். என் கணவருக்கும் சில மாதங்களிலேயே காரணமில்லாமல் வேலை போகிவிட்டது. இருவரும் சேர்ந்து யோசித்தோம், கணவரை குழந்தைகளை பார்த்துக்கச் சொன்னேன் என் கணவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பார்த்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் தான் என் கணவர் பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி சிறிஷ்டி என்ற பெயரில் விளம்பர நிறுவனம் ஆரம்பித்தேன். முழுமுயற்சியோடு உழைக்க தொடங்கினேன்.

முதலில் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து நேரில் சென்று விளம்பர டிசைன்கள், அளவு, தொகை குறித்த விவரங்களை கூறி ஆர்டர்கள் பெறுவேன். பிறகு வீட்டில் கம்ப்யூட்டரில் அந்தந்த விளம்பரங்களுக்கு ஏற்றவாறு டிசைன்கள் செய்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைப்பேன். விளம்பரங்கள் பத்திரிக்கையில் வெளியான பிறகு அதற்குரிய விலையை வாடிக்கையாளர்களிடம் கூறி அந்த தொகையை பெற்று பத்திரிகை அலுவலகத்தில் கட்டிவிடுவேன்.

 

எப்படிப்பட்ட விளம்பரங்கள் தயாரித்து வழங்குகிறீர்கள்?என்ன என்ன செய்கிறீர்கள்?
விளம்பரங்கள் வடிவமைப்பு மற்றும் அதை பிரிண்ட் செய்தல் ஸ்குரோலிங் விளம்பரங்கள் வடிவமைத்து டி.வி சேனல்களுக்கு அனுப்புவேன். அட் ஃபிலிம் மேக்கிங் வித் இன்னொவேட்டிவ் கான்சப்ட், கிரியேட்டிவ் திங்கிங், டப்பிங் செய்தல், ஈவண்ட் மேனேஜ்மெண்ட், விஷுவல் ஸ்லைட் அட் கான்சப்ட், விளம்பரங்கள் பிரிண்ட் மற்றும் விஷுவல் மீடியாவிற்கு வழங்குதல், பேமண்ட் கலெக்சன், ப்ளக்ஸ், slot, நேரலை நிகழ்வு ஒளிபரப்பு, Advertisement Promotion as per the needs and budget of the clients என அனைத்து வகை விளம்பரங்களும் செய்து கலக்கிக் கொண்டிருக்கிறார் காமினி.

குடும்பம்-வேலை எப்படி சமாளிக்கிறீங்க?
நான் வேலைப்பார்க்கிறேன்.என் கணவர் ரங்கத்திலேயே ஹோட்டல் வைத்து நடத்திவருகிறார். எனக்கான வேலைகள் எவ்வளவு இருந்தாலும் என் குடும்பத்திற்கான உணவை நானே சமைப்பேன். எனக்கு ஒரு பெண் பிள்ளை, ஒரு ஆண்குழந்தை.

அவள் பள்ளிக்கு சென்று வந்ததும் அவளிடம் தினமும் பள்ளியில் நடந்தவற்றை கேட்பேன், அவளின் பாடங்களை கற்றுக்கொடுப்பேன்.
என்னைப் பொறுத்தவரை வெற்றி என்பது என் குடும்ப வாழ்க்கை என் தொழில் இரண்டையும் நான் சரியாகவும் திருப்திகரமாகவும் முறையான வழியில் கையாளும்போதே வெற்றி என்பது எனக்கு உரித்தானதாக இருக்கும். மேலும் என்னுடைய ரோல்மாடலாக திருச்சி அபிராமி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் பூங்கொடியை கருதுகிறேன். பல பிரச்சனைகளை ஒரு பெண்ணாக அவர் திறம்பட தைரியமாக கையாண்டுள்ளார்.அவரை பார்க்கும்போது வியப்பாக இருக்கும். அவர் முன் நான் ஒன்றுமே இல்லை என கூறுகிறார் விளம்பரங்கள் படைக்கும் சிறிஷ்டி நாயகி காமினி.

Leave A Reply

Your email address will not be published.