திருச்சியில் ஒரு வித்யாசமான முயற்சி தென்னங்கீற்றில் தொப்பி

வடிவமைப்பது விஜயகுமார் அவருடன் ஒரு நேர்காணல்

0
1 full

திருச்சிராப்பள்ளியில் 40 வருடங்களாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் விஜயகுமார் சுப நிகழ்ச்சிகளில் வாழைமரம், தோரணம் கட்டும் தொழிலிலும் ஈடுபட்டு வரு கிறார்.  பல்வேறு விதமான தோரணங்களை வடிவமைக்க யூடியூப் பார்த்து முயற்சித்து தற்போது சுமார் 25 வடிவ தோரணங்களை வடிவமைக்கிறார். மயில், பூக்கள்,ரோஜா, மாலை , சோளக்கருது என பல வடிவிலும் தோரணங்களை உருவாக்குகிறார்.

மேலும் தென்னங் குருத்தோலைகளைக் கொண்டு தொப்பி, தோல் பைகள் என விதம் விதமாக வடிவமைப்பது விஜயகுமாரை வித்தியாசமானவராகவே அடையாளப்படுத்தி வருகிறது. ஒரு நாள் முழுவதும் உழைத்தால் 4 தொப்பிகள் தயார் செய்யமுடியும் என்கிறார்.

2 full

தென்னங்கீற்றில் உருவான தொப்பியினை  அனைவரும் ஆர்வமாக பார்க்கிறார்கள். பாராட்டுகிறார்கள். ஆனால் விற்பனை என்பது இல்லை என்கிறார். இவரைப்போல கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்களை மாவட்ட நிர்வாகம்  மதிப்பு கூட்டும் வகையில் இவரது கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தினால் நிச்சயமாக வித்தியாசமான கைவினைப்பொருட்கள் தயாரிப்பவர்கள் பலர் வெளியே வருவார்கள் என்பது நிதர்சன உண்மையாக இருக்கிறது. தொடர்புக்கு : 99442 29815

வெற்றிச்செல்வன்

3 half

Leave A Reply

Your email address will not be published.