Ntrichy.com

செவாலியர் நடிகர் அலெக்ஸ் !

RTI

செவாலியர் நடிகர் அலெக்ஸ்

 

Ukr

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம்  பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளதுஇங்கே  வாழ்ந்தவர்கள்  ஏராளம்.

மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின்  அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்ளைநம்ம திருச்சி வார இதழ்மூலம் திரும்பிப் பார்ப்போம்.

Happy house

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின்  அடையாளமாக விளங்கிய செவாலியர்.நடிகர்.அலெக்ஸ் பற்றி பார்போம்.

எளிய குடும்பத்தில் தந்தை அடைக்கலம் தாய் செல்லக்கண்ணு அம்மாளின் மகனாய் பிறந்து சாதாரண மாணவனாய் பள்ளி படிப்பை திருச்சி பொன்னையா மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியவர் தன் பள்ளி படிப்பு நாட்களிலேயே துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அன்றைய அணு விஞ்ஞானி அப்துல்கலாம் கையில் விருது வாங்கியவர் பின் நாளில் அதே மக்களின் ஜனாதிபதி கலாமிடம் தனது செவாலியர் விருதை காண்பித்து தன்னை அடையாளப்படுத்தியது அக்னிக்கு நிகரானது அலெக்ஸின் வாழ்க்கை வரலாறு.

இரயில்வே தொழிலாளியாய்துடிப்புள்ள இளைஞனாய் மண்ணின் கலைகளின் மீது கொண்ட தீராத காதலில் வீர விளையாட்டுகளையும் நாடக கலையை தன் குரு M.S.K.சாமி வழியாக மெருகேற்றி கொண்டவர்.

கிறிஸ்தவரான இவர் இளமையில் தன் துரைசாமிபுர பகுதியை சார்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தில் மீதும் புனிதரின் மீதும் மிகுந்த பக்தி கொண்டு விளங்கியதால் அப்பகுதி மக்களின் துணைக்கொண்டு உருவான ஆலயத்திற்கு தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டு அப்பகுதி மக்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றதால் என்னவோ பின் நாளில் தன்னுடைய கின்னஸ் சாதனை இந்த ஆலயத்தின் மேடையில் நிறைவேறியதோ என்ற அதிசயமும் அவருக்கு உண்டு.

திரை உலகில்..

Gold

ஆரம்பத்தில் நாடக நடிப்புத்துறையில் சிறந்து விளங்கியவர் புதுவாழ்வு என்னும் சமூகஆன்மிக விழிப்புணர்வு நாட்டிய நாடகத்தை தமிழ்நாட்டின் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் தன் வழி காட்டி தந்தை. அருட்திரு. இருதயம் அந்தோணி துணைகொண்டு அரங்கேற்றி சாதனை படைத்து பல விருதுகளை பெற்றார். வெள்ளத்திரை சினிமாவில் ரஜினிகாந்த் இயக்கிய முதல்படம்வள்ளியில் வாய்ப்பு வழங்கியது. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அலெக்ஸ் வித்தியாசமான வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார்.

மேஜிக் துறையில்

இவரின் உழைப்பும் விடாமுயற்சியும் கடின பயிற்சியும் வார்த்தையில் சொன்னால் புரியாது. பல ஆண்டுகள் கற்றாலும் பயிற்சி செய்தாலும் முதல் இடம் வர முடியாமல் தடுமாறும் இலட்சக்கணக்காண மேஜிக்மேன்கள் (மாய வித்தை) மத்தியில் இரண்டே ஆண்டுகளில் சினிமா நடிப்பு என்ற பெரும் பரபரப்புக்கு மத்தியில் மேஜிக் கலையை நுணுக்கமாய் விரைவாய் கற்று சிறந்த மேஜிக்மேனாய் பல்வேறு சாதனைகள் புரிந்து 2010-ஆம் ஆண்டு திருச்சி துரைசாமிபுரத்தில் தன்னை வளர்த்த ஆலயத்தின் புது வாழ்வு மேடையில் பொதுமக்களின் முன்னிலையில் 24மணிநேரம் மேஜிக் செய்து கின்னஸ் சாதனை புரிந்தார். அதனை எம் மண்ணின் வெற்றியென குறிபிட்டார். மேஜிக்ல் லிம்கா சாதனையும் புரிந்தார். மேஜிக் கல்விக்கென திருச்சியில் ஒரு கல்லூரி ஆரம்பிக்க ஆசைபட்டவர் அலெக்ஸ்.

சின்ன கர்ணன்

நலிவடைந்த நாடக நடிகர்களுக்கு உதவி தேவைபட்டால் ஓடி சென்று உதவிய அன்பும், மதம் பார்க்காமல் தன்னை தேடிவந்து கோவில் கட்ட உதவி கேட்பவர்களுக்கும், இல்லையென உதவி கேட்டு வருபவருக்கு கொடுத்து உதவியதில் இப்பகுதியின் கர்ணனாகவே வாழ்ந்தார் என்பதற்கு இவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்களே சாட்சி.

சமுக சேவையில் இவரின் பணியினை பாராட்டி செவாலியர் (2010) விருது வழங்கப்பட்டது. திருச்சிக்கே என்றென்றும் பெருமை சேர்க்கும் செயலானது நடிகனாய், சமூக சேவகனாய், மேஜிக் சாதனையாளனாய் இவர் வாங்கி குவித்திருக்கும் விருதுகள் மலைக்க வைக்கிறது.

விண்ணக விருது

இன்னும் பல உயரங்கள் தொடுவார் என்னும் நம்பிக்கையை காலதேவன் உடைத்து திடீர் நெஞ்சுவலியில் தன் விருது களின் சுவடுகளோடு இயற்கை எய்தினார் உழைப்பாளிகளின் தினமான மே 1, 2011ல்  அலெக்ஸ் முன்னெடுத்த சமூக சேவைநாடக நடிப்புத்துறைபிறருக்கு உதவுதல் இவற்றை இன்றும் அலெக்ஸின் துணைவியார் திரவியமேரி மகள்கள் பிரின்சி ராஜா மற்றும் டீனா ஜெரால்டு தொடர்ந்து பின்பற்றுவது தான் இன்றும் அலெக்ஸ் நினைவுகளை இயக்குகிறது என்பதே நிஜம்.

சாதாரண மனிதன் முயற்சி செய்தால் அதை தொடர்ந்து பயிற்சி செய்தால் எட்ட முடியாத உயரங்களையும் எட்டலாம் என்பதற்கு இம் மனிதன் இல்லை இல்லை மாமனிதன் அலெக்ஸ் நம் வாழும் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த சாட்சி. திருச்சியின் வரலாறை இனி எழுதும் எந்த ஆசிரியரும் அலெக்ஸ் என்ற பெயரை தொடாமல் திருச்சியை முழுமை செய்ய முடியாது. திருச்சி அடையாளங்கள் பகுதியில் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது என் திருச்சி  வார இதழ்.

Leave A Reply

Your email address will not be published.