Ntrichy.com

ஸ்ரீரங்கத்தை உறைய வைத்த சந்துருவின் கொலையின் பின்புலத்தில் நடந்தது என்ன ?

RTI

ஸ்ரீரங்கத்தை உறைய வைத்த சந்துருவின் கொலையின் பின்புலத்தில்

Ukr

நடந்தது என்ன ?

 

ஸ்ரீரங்கம் ஆச்சாரமானவர்களின் இருப்பிடம் இறைவனிடம் நிம்மதி தேடி வருபவர்கள் இங்கு அனேகர். அதே ஸ்ரீரங்கத்தில் பலரின் நிம்மதியை கொடுத்த ஒருவனின் திரைமறை வாழ்க்கை இன்று பட்டபகலில் இரத்த வெள்ளத்தில் அவனின் இறுதி முடிவு எழுதப்பட்டிருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Happy house

ஸ்ரீரங்கம் தெற்கு வாசலில் குடியிருப்பவர் சந்திரமோகன். ஸ்ரீரங்கத்திற்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான்.  வழிப்பறி கொள்ளையில் நிறைய பணம் கையில் புரளவும் ஏதாவது அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று நினைத்தவன். கால போக்கில் உதயநிதிமன்றத்தில் சேர்ந்து ஸ்ரீரங்க பகுதியில் பொறுப்பாளராக பதவி உதவி கிடைத்திருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இவர் தாயை ஒருவன் அடித்துவிட்டான் என்பதால் அவனை கொலை செய்து இருக்கிறார் இந்த சந்திரமோகன். அந்த கொலைக்கு யாரும் சாட்சி சொல்லக்கூடாது என்று அனைவரையும் மிரட்டி வந்த நிலையில் ஒரு பால் வியாபாரி மட்டும் இவன் கொலையை பற்றி சாட்சி சொல்லி இருக்கிறார்.

 

அதனால் இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் கடும் காவல் தண்டனையை நீதிமன்றம் கொடுத்துள்ளது, அதன்படி சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்த இவர் அந்த சாட்சி சொன்ன பால் வியாபாரியின் தலையை தனியாக துண்டித்து வடமதுரை பக்கம் கொண்டு சென்று நான்கு நாட்கள் சோப்புப் போட்டுக் கழுவி வைத்திருந்தாராம் .கடைசியில் காவல்துறை மீண்டும் சந்திரமோகனை கைதுசெய்தது ,அன்று முதல் இவர் தலைவெட்டி சந்திரமோகன் என்று அழைக்கப்பட்டுள்ளார் ,

உதயநிதிமன்றம், அன்பில் மகேஷ் நட்பு என நாளுக்கு நாள் அரசியலில் செல்வாக்கு உயர்ந்து இருந்தது. அப்படியே திமுக கட்சியில் இணைந்து ஸ்ரீரங்கம் ராம்குமார், முன்னாள்  அமைச்சர் கே.என்.நேரு, ஆகியோர் தலைமையில் கட்சியில் இணைந்து கொண்டாலும் ஸ்ரீரங்கம் வழிப்பறியிலிருந்து மாறி கஞ்சா விற்கும் கும்பலின் தலைவனாக மாறியிருக்கிறான். கஞ்சா போதையில் ஸ்ரீரங்கத்தில் பல பிரச்சனைகளை செய்து உள்ளான்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் கோவிலில் நடந்த திருமணமத்தில் தம்பதிகளுக்கு ஆதரவாக கோவில் உள்ள ஒருவரிடம் மிரட்டியதாக வீடியோ ஒன்று வெளியானது.  ஆனால் ராம்குமார் தரப்பிலோ கோவிலுக்கு வரும் தம்பதிகளிடம் மிரட்டி பணம் கேட்டதை தட்டிக்கேட்டதை தான் வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளனர் என அவர் தரப்பு விளக்கத்தை கொடுத்தார்.

Gold

இந்த பிரச்சனை வெளிவந்த அடுத்த சில நாட்கள் கழித்து வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த ராம்குமாரை சந்துரு உள்ளிட்ட 4 பேர் வந்து ராம்குமாரை நேரடியா மிரட்டி சென்றிருக்கிறார்.  இது குறித்து ராம்குமார் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க ஸ்ரீரங்கம் போலிஸ் இது தான் சமயம் என்று ஸ்ரீரங்கம் சந்துருவை பிடித்து சிறையில் போட்டது.

 

இந்த வழக்கில் ஜாமீன் பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த சந்துரு கஞ்சா போதையில் தன்னுடைய இருந்த பழைய நண்பர்கள் என யாரையும் விடாமல் எல்லோரையும் கடுமையாக தாக்கியிருக்கிறார் இதனால் உடன் இருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதில் படையப்பா என்பவரின் தம்பியை இந்த தலைவெட்டி சந்திரமோகன் சில கஞ்சா போட்டு, கண்ணுமுன்னு தெரியாமல் அடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில் தான் சந்துரு தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீரங்கத்திலிருந்து திருவானைக்காவலுக்கு சென்றார். தேவி தியேட்டர் மேம்பாலம் அருகே செல்லும்போது திடீரென 3 பேர் கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர்.

 

கையில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள் சந்துருவுடன் தகராறில் ஈடுபட்டதுடன் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். மேலும் தலையை தனியாக துண்டித்தனர். இதில் சந்துரு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

ஊரடங்கு காரணமாக அப்பகுதியில் இன்று காலை ஆட்கள் நடமாட்டம் சற்று குறைந்து இருந்தது. அங்குள்ள காய்கறி கடைகளுக்கு வந்திருந்த பொதுமக்கள் கொலை சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

 

இதனிடையே கொலையாளிகள் சந்துருவின் தலையை கையில் எடுத்துக்கொண்டு நேராக ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தனர். கொலையாளிகள் தலையுடன் வருவதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் சந்துரு உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

விசாரணையில் கொலையில் ஈடுபட்டது ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த சரவணன், அவரது சகோதரர் மற்றும் உறவினர் ஒருவர் என்பது தெரிய வந்தது. சரவணன் ஒரு வழக்கில் சந்துருவுக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு சில நாட்களுக்கு முன்பு சரவணன் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி உள்ளார். கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் சந்துரு தன்னை கொலை செய்து விடுவாரோ என்ற பயத்தில் அதற்கு முன்னதாகவே சந்துருவை தனது சகோதரர் உறவினருடன் சேர்ந்து சரவணன் கொலை செய்துள்ளது போலீசாரின் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

 

சந்திரமோகன் கொலை செய்து தலையை எடுத்து சென்ற சுரேஷ், சரவணன், செல்வகுமார் ஆகிய மூன்று பேரிடம் போலீசார். விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

வழிப்பறி கொள்ளையனாக இருந்து ரவுடியாக அவதாரம் எடுத்து கஞ்சா விற்பனை செய்து, ஸ்ரீரங்கத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அரசியல்வாதியாகி மாறி அத்தனையிலும் தப்பிக்க நினைத்த ஸ்ரீரங்கம் சந்துரு தன் வாழ்க்கைக்கு கையில் எடுத்த அதே அரிவாளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆச்சாரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தை உறைய வைத்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.