மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயருடன் நமது ஆசிரியர்

0

ஐயா இந்த நெருக்கடியான சூழலில் மக்களுக்கு அதிக அளவில் உதவி புரிந்து வருகிறீர்கள் அவை பற்றி?

ஏழை எளிய மக்களுக்கு  காலை மதியம் இரவு உணவு வழங்குகிறோம். மன்னார்குடியில் இருந்து இங்கு வந்து முதலில் 100 பேரில் ஆரம்பித்து  தற்போது 1500 பேருக்கு வழங்கி வருகிறோம். முடியாதவர்களை தேடிச்சென்று அவர்கள் கையில் கொடுக்கிறோம். ஆஸ்பத்திரி வாசலில், தெருவில் உணவிற்காக காத்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் உதவுகிறோம். சிலருக்கு சுகர், பிபி இருக்கும் அதனைக் கேட்டு அவர்களுக்கு ஏற்ற உணவான இட்லி, சப்பாத்தி, இவற்றை வழங்குகிறோம். மதியம் புளியோதரை என கலவை சாதம் வழங்குகிறோம்.

தூய்மைப்பணியாளர்களுக்கு தனி மரியாதை செய்தது பற்றி?

‌சந்தா 1

கைங்கரிய கைலாசம் என்பர். தூய்மைப்பணியாளர்கள் என்று வேறுபடுத்தி பார்க்க கூடாது. அவர்களுக்கும் சமூகத்தில் சமமரியாதை உண்டு என்பதை அவர்களுக்கு தெரிய வைக்கவே அவர்களுக்கு தனி மரியாதை செய்தோம்.

சந்தா 2

இறை வழிபாடு பற்றி?

வீட்டிலிருந்தபடியே ராமநாம ஜெபம் செய்யுங்கள். சர்வதோஷம், சர்வ ரோகம் நீங்கும். பூஜை தெரியாதவர்கள் உங்களுக்கு இஷ்ட தெய்வங்களின் பெயர்களை உச்சரிக்கவும். அதுவே போதும்.

இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு தாங்கள் கூற விரும்புவது?

லோகத்தில் அனைவரும் நன்றாக இருக்கணும். அரசாங்கம் சொல்வதை  கேட்டு அதன்படி நடங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.மக்கள் அனைவரும் சீக்கிரம் இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவரவேண்டும் அதற்கு நாம் எல்லோரும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார். 

வெற்றிச்செல்வன்

Leave A Reply

Your email address will not be published.