Ntrichy.com

திருச்சி அருகே கூட்டுறவு நகை ஏலத்தில் முறைகேடு-தலைவர் சஸ்பெண்ட்

RTI

மணப்பாறையை அடுத்த ஆளிப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்கள் நகைகளை வைத்து பணம் வாங்கி வேளாண்மை செய்து வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஒரு நாளிதழில் 2012-2018 வரை நகை வைத்தவர்கள் அதனை திருப்பிக்கொள்ளுமாறும், இல்லையெனில் நகை ஏலத்திற்கு விடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 2019-ல் நகை வைத்த சிலர் தற்போது அந்த கூட்டுறவு சங்கத்திற்கு சென்று நகைகளை திருப்ப முயன்ற போது, உங்களது நகைகள் யாவும் ஏலத்தில் விடப்பட்டன என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள் 2018 வரைதான் ஏலம் என நாளிதழில் வெளியாகி இருந்தது. நாங்கள் 2019-ல்தான் நகையை அடமானம் வைத்தோம். எங்களது நகைகளை எப்படி ஏலம் விடலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட சங்க இணைப்பதிவாளர் அருளரசு நேரில் சென்று விசாரணை நடத்தியதில், நகை ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவர சங்கத்தலைவர் செல்வராணி என்பவரை பணியிடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார். இப்போது கூடுதல் பொறுப்புகளை துணைத்தலைவர் தங்கவேல் கவனித்து வருகிறார்.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.