சங்கிலியாண்டபுரம் அங்காளம்மன் கோவிலில் நடுநிசியில் திக் திக்…..

மயான கொள்ளை நிகழ்ச்சிமயான கொள்ளை நிகழ்ச்சி

0

திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தில் ஸ்ரீ அங்காளம்மன்  திருக்கோவிலின் பதினோராம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.

மாசி மாதம் இரண்டாம் தேதி கணபதி ஹோமம் பூச்செரிதல் விழாவுடன் துவங்கப்பட்டது. முகூர்த்தக்கால் நடுதல், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, கூழ் வார்த்தல், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

மேலும் பூ கரகம், பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி, முளைப்பாரி, அலகு குத்துதல், மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மேளதாளத்துடன் வீதி உலா வந்து அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கினார்கள். தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், பூஜை மகா தீபாரதனை, ஊஞ்சல் அலங்காரம் ஷோடசோபசார ஆராதனையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது. பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டது

‌சந்தா 1

இந்த வழிபாட்டுச் சடங்கின் முக்கிய நிகழ்வாக “மயான கொள்ளை” நிகழ்ச்சியானது  வழிபாட்டுச் சடங்கியல் சார்ந்த நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.

சந்தா 2

திருக் கோவிலில் இருந்து ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பேச்சியம்மன் கோவில் நிர்வாகியும் பூசாரி மான திருநங்கை கமலாவிற்கு புடவை கட்டி, முகத்தில் சிகப்பு வண்ணம் பூசி, நீண்ட முடியுடன் ஒப்பனை செய்து அம்மன் வேடமிட்டு கையில் சூலாயுதத்துடன்  தாரை தப்பட்டை மற்றும் பம்பைக்காரர்கள் இசைக்கப்படும் இசை மற்றும் பாடலுடன் ஊர்வலம் நடைபெறுகிறது. 

ஊர்வலம் சுடுகாட்டை வந்தடைகின்றது சுடுகாட்டின் பகுதியில் மலர் பந்தல் போடப்பட்டு இருக்கின்றது.சுடுகாட்டில் இறந்தவரின் பிரேதம் எரிந்து கொண்டிருக்க சூலாயுதத்தால் அம்மன் வேடமிட்ட திருநங்கை கமலா குத்தி சுவைப்பது மயான கொள்ளை நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்வாக அமைகிறது.

பின்பு பிரேதம் உள்ள இடத்தில் உள்ள மண் அல்லது சாம்பல் தீய சக்திகளையும், நோய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்ததாகவும் மக்களால் நம்பப்பட்டு திருநீறு போல் மக்கள் பூசிக் கொள்கிறார்கள் பேய், பிசாசுகளை விரட்டும் ஆற்றல் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

மயான கொள்ளை நிகழ்த்துதலில் காளி, அங்காளம்மன், காட்டேரி, பேச்சியம்மன் போன்று வேடம் ஏற்பவர் பம்பை இசைக்கேற்ப ஆடுகிறார். பம்பைகாரர்கள் பாடும் பாடலும், ஆடலும் சிறப்பிடம் பெறுகிறது. இவையனைத்தும் மயான கொள்ளை என்னும் வழிபாட்டு நிகழ்ச்சியின் சடங்குகளாக நடக்கின்றன. சுடுகாட்டில் கிடைக்கக் கூடிய தானிய வகைகளை பிரசாதமாக உண்கிறார்கள் பின்பு திருக்கோவிலுக்கு வந்து கருப்பு கெடா குட்டி இரத்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திருநங்கையர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமாக பங்கேற்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.