சி.ஏ.ஏ, என்.பி.ஆர். என்.ஆர்.சி, எதிரான பொதுக்கூட்டம்

அஞ்சாதே! போராடு! மாநாடு

0

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில்  அஞ்சாதே போராடு என்கிற தலைப்பில் என்.ஆர்.சி, சி.ஐ.ஏ. எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா :

1949 இல் அரசியலமைப்பு பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது உரிமை என்பது மதம் அடிப்படையில் இருக்க முடியாது என்று தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 2004 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டவிரோதமானது.

குடியுரிமையை கேள்விக்குறியாக்கி, சட்ட சிக்கலை ஏற்படுத்தும் செயலை தான் தற்போது உள்ள மத்திய அரசு செய்து வருகிறது.

குறிப்பாக ஆறு மதங்களை குறிப்பிடுவதுடன், முஸ்லிம் உள்ளிட்ட சில சிறுபான்மை மதங்கள், சில சமயப் பிரிவுகள் சில நாடுகள் ஆகியவற்றை விலக்குகிறது. இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14 ,15 பிரிவுகள் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளன.

மக்களுக்கு எதிராக மக்களுக்கு, மதத்திற்கு எதிராக மதத்திற்கு, மதம் குழுவுக்கு எதிராக மதக்குழுவிற்கு சலுகை அல்லது பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்பு சட்டம் ஏற்காது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா

தேசிய குடிமக்கள் பதிவேடு கட்டாயமாக்கப் படுவதை ஏற்க முடியாது. ஏனெனில் அரசியல் அமைப்பு சட்ட பிரிவுகள் 5, 11, 14,15, 17, 19, 21, ஆகியவற்றின் படி பல்வேறு வழக்குகளில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புகள் மூலம் நமது உரிமைகளை உறுதி செய்யப்பட்ட நிலையில் அதை இந்த மத்திய அரசு மீற முடியாது.

குடியுரிமை திருத்த சட்ட விதிகள் கள்ளக் குழந்தை என்று சொல்ல முடியாது. தாய் தந்தை இல்லாத அனாதை குழந்தைகள் போன்று இவ்விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சிஐஏ, என்ஆர்சி, என்பிஆர் இந்த சட்டம் இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் அல்லாது அனைத்து மதத்தினருக்கும் எதிரானது.

பொதுமக்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து இந்த சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்.

போராட்டத்திற்கு காவல்துறையினர் தங்கள் சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி கொடுக்க வேண்டும் நீங்கள் அனுமதி கொடுக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் அனுமதி வழங்கப்படும்.

நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துவிட்டது விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த என்ன அவசியம் என்று கொதித்தெழுந்தார்.

மக்கள் அதிகாரத்தின் அஞ்சாதே போராடு என்கிற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் திரள் வெள்ளத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொது மக்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இயக்குநர் லெனின் பாரதி

இயக்குநர் லெனின் பாரதி

நாம் யாரும் இந்துக்களே கிடையாது, வெள்ளக்காரன் கொடுத்த பெயர் தான் இந்து. வடிவேல் படத்தில் கிட்டி திருடுட நயவஞ்சகமாக அழைத்து செல்வது போன்று, இந்து இந்து என்று சொல்லி நம்மை அழைத்து சென்று பலி கொடுக்க அலைக்கிறார்கள் இந்த காவி பாசிச கட்சிகள். இளைஞர்கள் இன்றை சக்தியை 90 சதவீதம் சினிமாவிலே இழக்கிறார்கள். இதில் மீண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்றார். வெள்ளைக்காரன் காலில் விழுந்து நக்கி சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொன்ன கூட்டம் தான் தற்போது இந்தியர்கள் யார் என்று தீர்மானிக்கிறோம் என்கிறார்கள்.

 

கர்நாடகா அரசு வழக்கறிஞர் பாலன்

கர்நாடகா அரசு வழக்கறிஞர் பாலன்

தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த கிட்லர் யூத மக்களை அழிப்பதற்காக எழுதப்பட்ட 25 அம்ச திட்டத்தை இதை காப்பியடித்து விடி.வீர்சவர்வர்க்கார் உருவாக்கியது தான் இந்துத்துவா. கிட்லருக்கு வீர்சவர்வார்க்கார் கொடுத்த பட்டம் கிருஷ்ணனின் அவதாரம். . கிட்லர் யூதர்களுக்கு எதிராக என்ன என்ன செய்தாரோ அதை தான் இங்கே மோடி செய்கிறார். இந்த சிஏஏ சட்டமும் வீதி போராட்டத்தில் தான் வீழ்த்தப்படும். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் நீங்கள் தடுப்பு முகாம் கட்டுக்கொண்டிருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று பதில் அளித்தனர். உரிமைகள் பறிக்கப்பட்ட போது யூத மக்கள் போராட்டத்திற்கு வராமல் வீடு, சொத்து என சேர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கடைசியில் எல்லாமே பறி போனது. அதே நிலை நம் நாட்டில் முஸ்லீம், கிறிஸ்தவர்கள், தலித்துக்களுக்கு வரும் என்றார்.

 

காளியப்பன்

காளியப்பன்

food

வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போட், இவை எல்லாம் தான் தான் குடிமகன் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் மோடி அரசு இதை எதையும் செல்லாது என்கிறார்கள். சட்டம் எதை எல்லாம் ஆதாரம் என்கிறார்களோ அதை இவர்கள் ஆதாரம் இல்லை என்கிறார்கள். இப்போது உள்ள நிலையில் யாரும் குடிமகன் இல்லை. வரும் கணக்கெடுப்பில் உங்களை நிறுபித்துவிட்டு குடிமகனாக மாறுங்கள் என்கிறார்.. மோடி அரசுக்கு எந்த அதிகாரம் இல்லாத நிலையில் தற்போது பாசிசமாக எல்லோரும் நாடெற்று இருக்கிறோம்.

பாலாஜி

 

பாலாஜி

டெல்லி ஜே.எம்.யு. பல்கலைகழகத்தில் மாணவ தலைவர். பேசும் போதுஞ் மோடி – ஷாவை இந்தியாவில் எதிர்த்தது சென்னை ஐஐடியில் உள்ள அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம். அதனால் தான் அவர்கள் மாணவர்களை வெறுக்கிறார்கள். இந்த சங்கிமங்கி அரசு மாணவர்களை வெறுத்து அவர்கள் கல்வி கட்டணத்தை அதிகரிக்கிறார்கள். மத்திய அரசு தமிழக அரசை கைபொம்மையாக நடத்துகிறார்கள். இதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த சட்டத்தை மாணவர்கள் தங்கள் இரத்தம் சரத்திரத்தில் மீட்பார்கள். சுபாஷ் சந்திர போஸ் கோஷம் நீங்கள இரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை பெற்று தருகிறேன் என்றார். ஆனால் மோடி அரசு அதை மாற்றி உங்கள் ஆவணங்களை காட்டுங்கள் குடியிரிமை தருகிறேன் என்று சொல்கிறது. என்று பேசினார்.

பேசி முடித்த பின்பு வட இந்தியா மூலவும் ஒலிக்கும் ஆசாதி கோஷத்தை உரக்க சொல்ல அங்கிருந்த அனைவரும் அதே குரலில் மீண்டும் ஒலிக்க மைதானமே அந்த கோஷத்தில் விண்ணை அதிரும் அளவுக்கு சென்றது..

தியாகு

தியாகு

மோடி, அமிர்ஷா, மோகன் பகவத் இவர்கள் எல்லோரும் தடியர்கள், தடி எடுத்தவன் எல்லாம் தண்ணல்காராக என்று நினைக்கிறார்கள். இதை தான் எதிர்க்கிறோம். 1948ம் ஆண்டு சிங்கள அரசு சுதந்திரம் பெற்றவுடன் மலையக தமிழர்களை எதிர்த்து முதல் சட்டம் குடியிரிமை சட்டம். தமிழ்நாடு போராட்டத்தில் இலங்கை தமிழருக்கு குடியிரிமை கோரும் போராட்டமாக வேண்டும். அப்போது அவர்கள் உங்களுக்கு அந்த உரிமை கிடையாது என்பார்கள். இதை தான் இந்த தடியர்கள் நம்மிடம் கொஞ்சம் மாற்றி சொல்கிறார்கள். இது கூட்டாட்சி கொள்ளைக்கு எதிரானது,

இத்தாலியின் முசொலி – ஜெர்மனியின் கிட்லர் – ஜப்பனின் டோஜோ – ஸ்பெயின் பிரான்கோ ஆகிய பாசிச வாதிகளுக்கு இன வெறி மட்டும் அல்ல.. அந்த நாட்டின் பெரும் பணக்கார்களை தூக்கி நிறுத்த நினைத்தார்கள். 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் மோடி கொடுத்த உறுதிமொழிகளை ஒப்பிட்டு பாருங்கள். இந்த அரசு பொருளியல் நெருக்கடியில் இருக்கிறார். இந்த நெருக்கடி அம்பானிகளையும், அதானிகளை பாதிக்காது, காரணம் அவர்களுக்கு 5.30 இலட்சம் கோடி கடன் தள்ளுபடி கொடுக்கிறார்கள்.

வழக்கறிஞர் ராஜு

மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு :

ஒவ்வொரு மாநிலத்துக்கேற்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊருக்கும் ஜனநாயகம் மாறுகிறது. ஸ்டெர்லைட் எதிர்த்து உயிர் கொடுத்து போராடினார்கள். போராடியவர்களை தேசத்துரோகிகள் என்று குரல் கொடுக்கிறார்கள் பிஜேபியும் இந்து முன்னணியும்.

சங்பரிவாரம் அகண்ட பாரதம் விரும்புகிறது. ஒற்றை வரி, ஒற்றை கலாச்சாரம், ஒரே நாடு ஆக்கிவிட விரும்புகிறது. அதை கொண்டு வர முடியாது. காரணம் கோமாதா க்ஷிs காளை அடக்குபவர்களுக்குமான போராட்டம் இங்கு நடக்கிறது. மக்கள் ஒன்றுபடுத்த தலைவனில்லை. கட்சியில்லை.

2020 ல் காந்தி இருந்த போது ஏற்பட்ட நிலைமை இருக்காது. எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட், கதிராமங்கலம், நெடுவாசலில் மக்களே போராடினார்கள். முறியடித்தனர். இந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு அமைப்புகள் துணை நின்றார்கள் நாமும் சேர்ந்து அவர்களுக்காக போராடினோம். வழக்கு சுமந்தோம், சிறை சென்றோம். எந்த தலைவர்கள் வந்தார்கள். பிஜேபி, அதிமுக வர வேண்டாம் என்பதானால் திமுக 39 எம்பி வெற்றி பெற்றனர். இதனால் திமுக முன்னெச்சரிக்கையாக 2 கோடி கையெழுத்து பெற்றது.

தமிழக அரசுக்கு என்ன தயக்கம்.. சிஏஏ அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க. இன்னும் ஒரு வருடத்தில் ஆட்சி முடிய போகிறது எடப்பாடி மக்கள் மத்தியில் வந்தே ஆக வேண்டும்.

மக்களை சந்திக்க வரும் அதிமுக அமைச்சர்களை கேள்வி கேளுங்கள். தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளது. பட்ஜெட்டில் பற்றாக்குறை பட்ஜெட் தான் உள்ளது. உற்பத்தி மந்த நிலை. வியாபாரம் இல்லை. 5 மில்லியன் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை. பொதுதுத்துறை தனியார் மயமாகும். இப்படி இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

அனைத்து நோய்களுக்கும் ஒரே ஆன்டி பயாடிக் நேருக்கு நேராக போராடி மோடி, அமித்ஷா, ஆர்எஸ்எஸ் கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டாமல் வேறு வழிஇல்லை. இனி இளைஞர்களுக்கு போராட்டம் தான் முழுநேர வேலை, பெண்கள், உழைக்கும் மக்கள் போராட வாருங்கள். எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வாருங்கள்.

வண்ணாரப் பேட்டையில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடக்கிறது. கோலம் போட்டவர்களை கைது செய்கிறார்கள். காவல் துறை தடை, நீதிமன்ற தடைக்கு பிறகு தான் போராட்டம் தொடர்கிறது.

காஷ்மீரில் மக்களை சிறை வைத்தனர். அப்போதும் எழுச்சி ஏற்படவில்லை, பாபர் மசூதி தீர்ப்பின் போது எழுச்சி வர வில்லை. அயோத்தி குற்றவாளிகள் ராமர் கோவில் கட்டும் டிரஸ்டின் உறுப்பினர்கள் . புதிய கல்வி கொள்கை, உபா சட்டத் திருத்தம் என எப்போதும் எழுச்சி வரவில்லை. தற்போது இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து தலித், ஆதிவாசி, முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் என மொத்த மக்களையும் ஒழிப்பதே இவர்களின் நோக்கம். மக்களை அச்சுறுத்தி பதட்டத்தில் வைத்திருப்பதே பாசிசம். அதை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் செய்யும். போராட்டமே இதற்கு தீர்வு. உச்ச நீதிமன்ற நீதிபதியே இங்கு வந்து ஜநாயகத்தை காப்பாற்றும்போராட அழைப்பு விடுத்து பேசி இருக்கிறார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சென்னையில் அரசியல் சட்டத்தை காப்பாற்ற மனித சங்கிலியாக கைகோர்த்து நிற்கிறார்கள். நீதிமன்றத்திற்கு போகாதீர்கள் நீதி கிடைக்காது எங்கு நீதிபதிகள் சொல்கிறார்கள். நீங்கள் போராடுவதால் உங்கள் மீது தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீது நடக்கும் தாக்குதல் என்கிறார். ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு. சிஏஏவை வைத்து மக்களை பிரித்து பாசிசத்தை செயல்படுத்தலாம் என ஆயுதத்தை ஏவியிருக்கிறார்கள்.

அதே ஆயுதத்தை வைத்து ஆர்எஸ்எஸ், பிஜேபி கும்பலை ஆட்சியிலிருந்து மட்டுமல்லாமல் சமூகத்திலிலுந்து துடைத்து எறிவது தான் இந்த மாநாட்டின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

பாடகர் கோவன்

மக்கள் பாடகர் கோவன் :

இந்தியாவில் நடத்தப்படும் இந்த அடக்குமுறை அனைவருக்கும் தான். ஆனால் நமக்கு எல்லாம் ஏற்படும் பாதிப்பை போராட்டத்தின் முதல் வரிசையில் ஆரம்பித்திலே முஸ்லீம்கள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று அஞ்சாதே போராடு , Say no NRC, NPR சம்மதமா, பெகருகான் யாரு ஒரு ஏழை விவசாயி, கவுண்டவுன் ஆகுது காவியின் நாட்கள், பாஜக ஆட்சியில பள்ளத்துல மாட்டிகிச்சு பொருளாதாரம், ஆசாதி ஆகிய பாடல்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது இரவு 10.30 மணி வரை 20,000க்கு மேற்பட்ட மக்கள் அப்படியே நின்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் கடைசியில் போராட்ட செலவிற்காக ஏந்தப்பட்ட உண்டியலில் ரூ. 1,98, 300 திரண்டதாக சொல்லப்படுகிறது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.