உறையூரில் இப்படியும் ஒரு சமூக ஆர்வலர்

0
1 full

நிலப்பரப்பு குறைகிறது. காடுகள் அழிக்கப்படுகிறது. பூமி வெப்பமடைகின்றது என்பதை நாம் எல்லோரும் உணர்கிறோம். அதற்கு என்ன செய்கிறோம். ஆனால் அதனை மனதில் நிறுத்திய “வினைசெய் கார்த்திக்குடன் என்திருச்சி ஆசிரியர்.

வினைசெய் என்ற அமைப்பை உருவாக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

புவி வெப்பமடைகின்றது. ஏனெனில் காடுகள் அழிக்கப்படுகிறது என்று கூறிக்கொண்டே நாம் காடுகளை அழித்து நாடாக்கி வருகிறோம்.  மரம் நடுவதை ஒவ்வொருவருக்கும் உணர்த்தும் விதமாக, சமூக சேவையில் வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைத்து “வினைசெய் என்ற இந்த அமைப்பை ஆரம்பித்தேன் என்கிறார் “வினைசெய் கார்த்திக்.

2 full

உங்கள் சொந்த ஊர்?

உறையூர்.

வினைசெய் என்றால் என்ன?

வித்தியாசமாக சமூக சேவை செய்ய நினைத்து, பொது இடங்களில் மரங்களை நட்டால் பராமரிப்பின்றி அழிந்து விடும். ஆடு, மாடுகள் கடித்துவிடும். தனிப்பட்ட இடத்தில் நட்டால் அது பாதுகாப்பாக வளரும். அதனால் கல்வி வளாகத்தில் சென்று மரங்களை கொடுக்கிறேன். அவர்கள் அதனை பாதுகாக்கின்றனர். ஆர்ட்ஸ், சயின்ஸ் பள்ளியில்

41 மரம் நட்டேன். போலீஸ் டிராபிக் டிபார்ட்மெண்டில் இடம் காலியாக உள்ளது என்றனர். அங்கு சென்று மரம் நட்டுள்ளேன். அவர்கள் அதனை பாதுகாக்கின்றனர்.

போன் செய்தால் மரம் தருவீர்களா?

கண்டிப்பாக. 96293 28373 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், மரம் தருகிறேன். அதனை நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

எவ்வளவு காலமாக இதனை செய்து வருகிறீர்கள்? எத்தனை மரங்கள் நட்டுள்ளீர்கள்?

கடந்த ஒன்றரை வருட காலமாக. 120 மரங்கள் நட்டுள்ளேன். 80 விழுக்காடு மரங்கள் வளர்ந்திருக்கும்.

 

 

வேறு என்ன சமூகப்பணிகள் செய்கிறீர்கள்?

பழைய துணிகளை பெற்று, அதனை சேர்த்துவைத்து ஆண், பெண் என பாகுபாடு பிரித்து, ஒருநாள் அதனை எடுத்துச்சென்று துணி இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். கார்ப்பரேசன் அன்புச்சுவர் என்று ஆரம்பித்துள்ளது போல் இதனை காவல்துறை உதவியுடன் ஒரு நாள் செய்தோம்.

மேலும் தெருநாய், ஆடுமாடுகளுக்கு சாப்பாடு தருகிறோம்.  சாப்பாடு இல்லாமல்தான் அது கடிக்கிறது. சாப்பாடு கொடுத்தால் கடிக்காது. அவற்றிற்கு ஒருவேளை சாப்பாடு தர உள்ளோம். செய்தும் வருகிறோம். இவ்வளவு சமூக அக்கறை உள்ள ஒரு மனிதரை சந்தித்த சந்தோஷத்தில் அவரிடமிருந்து விடைபெறுகிறோம்.

–    வெற்றிச்செல்வன்

3 half

Leave A Reply

Your email address will not be published.