திருச்சியில் சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சி

சாலை பாதுகாப்பு குறித்த

0
full

சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து சாலை பாதுகாப்பு விதி குறித்து சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி கிளை நூலகத்தில் நடைபெற்றது. நூலகர் தேவகி தலைமை வகித்தார்.

வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் சிறப்பு அஞ்சல் உறை மற்றும் அஞ்சல் தலையினை காட்சிப்படுத்தி பேசுகையில், ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் சாலைப் பாதுகாப்பை பின்பற்றி நடக்க வேண்டும். நாம் எப்போதும் பின்பற்றி நினைவில் கொள்ள வேண்டிய பல அடிப்படை போக்குவரத்து விதிகள் உள்ளன.

ukr

போக்குவரத்து விளக்குகளைப் பின்தொடர்வது, சாலை அறிகுறிகள் எச்சரிக்கை குறியீடுகள் குறித்து அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும், வாகனம் ஓட்டும்போது ஒரே கோட்டில் செல்ல வேண்டும்,

poster

தேவைப்படும்போது குறிகாட்டிகளைப் பயன்படுத்த வேண்டும், ஓட்டுனர் உரிமத்துடன் வாகனம் ஓட்ட வேண்டும்.

எல் போர்டு போன்ற அறிகுறிகளை பொருத்தி வாகனம் ஓட்டுபவர்களை மிகவும் கவனமாக ஓட்ட எச்சரிக்கலாம். வாகனங்களை வாகன நிறுத்துமிடங்களில் மட்டும் நிறுத்துங்கள். தலைக்கவசம் உயிர் கவசம் என்பதை நூலக வாசகர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

half 1

Leave A Reply

Your email address will not be published.