பக்தியும் சேவையுமே நாட்டுக்கு நல்லது -சுந்தர் பட்டர்

0
1

இந்த கலியுகத்தில் நாடும், வீடும் நன்றாக இருக்க வேண்டுமானால் சேவை மனப்பான்மை வளர வேண்டும். பக்தியும், சேவையுமே நாட்டுக்கு நல்லது செய்யும் என்கிறார் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மிராசு பட்டர் என்றழைக்கப்படும் சுந்தர் பட்டர். இவரது இயற்பெயர் சுந்தர்பட்டர் (எ) சீனிவாஸராகவ பட்டர்). குளித்தலையில் ஜுன் மாதம் 21ம் நாள் 1959ல் பிறந்தார்.

தனுசு ராசியில் (மூல நட்சத்திரம்) பிறந்தவர். பெரம்பலூர் அம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எல்.எல்.சி. வரை பயின்றுள்ளார். இவரது தந்தையார் வாசுதேவ அய்யங்கார். இவர் பெரம்பலூர் வரதராஜ பெருமாள் கோவில் அர்ச்சகராக இருந்தவர். தாயார் ருக்மணி அம்மாள்.
வேதங்களை ஸ்ரீரங்கம் சிங்கம் அய்யங்கார் பாடசாலையில் பயின்றார்.

பயின்ற வருடம் 1977-1984. ஆகமம், வேதம், பிரபந்தங்களை கற்றவர். படித்து முடித்தவுடன் தனது 15-வது வயதில் 1977ல் ரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகராக பணியில் அமர்ந்தார். அப்போது தலைமை அர்ச்சகராக சீமாபட்டர், கிருஷ்ணபட்டர் ஆகியோர் பதவியில் இருந்தனர். அவர்களிடம் 7 வருடங்கள் உதவி அர்ச்சகராக பணிபுரிந்தார். 2014-ல் தலைமை அர்ச்சகராக பணி உயர்வு பெற்றார்.

யாத்ரீக பயணமாக 108 திவ்ய தேசங்களில் 90 திவ்ய தேசங்களை தரிசித்துள்ளார். இதில் பத்ரிநாத், பஞ்ச துவாரகை, மதுரா, பிருந்தாவன், கோகுலம், காட்மண்ட் (நேபாளம்) இவையும் அடங்கும்.
வாழ்வின் சாதனையாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 3 முறை மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தியதையும், உப கோவில்கள் சிங்கர்பெருமாள் கோவில், நாச்சியார் கோவில், அன்பில் சுந்தர்ராஜ்பெருமாள் கோவில் கும்பாபிஷேகங்களையும் செய்துள்ளார்.

அவர் பெற்ற பட்டங்கள்: ஸ்ரீரங்க கைங்கர்ய ரத்னா (வியாசராசர் மடம், பெங்களூரு, ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ, ஸ்ரீரங்க கைங்கர்ய துரந்தரா).
1984 ஏப்ரல் 12-ல் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜெயந்தியை திருமணம் செய்து கொண்டார். 3 மகள்கள் உண்டு. மூத்த மகள் விஸ்வ ஜனனியை மதுரையைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இருவரும் ஐதராபாத்தில் பணிபுரிகின்றனர்.

2

இளைய மகள் ஸ்ரீரஞ்சனியை திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இருவரும் சென்னையில் பணிபுரிகின்றனர்

.
கடைசி மகள் ஸ்ரீநிதியை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீசரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இருவரும் லண்டனில் பணியாற்றிய பின் தற்போது சென்னையில் பணிபுரிகின்றனர். 2 பேரன்களும் 2 பேத்திகளும் உள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும் என்று கூறும் இவர், தனது மகள் ஸ்ரீரஞ்சனியின் திருமணத்தையொட்டி ஜெயலலிதா தனது போயஸ்கார்டன் வீட்டிற்கு சுந்தர்பட்டரின் குடும்பத்தினரை அழைத்து விருந்து அளித்ததை வாழ்வில் மறக்க முடியாது என்று கூறுகிறார்.

ஸ்ரீரங்கம் பெருமாள் மீது அதிக ஆர்வமும், விசுவாசமும் கொண்டவர். வேதம், பிரபந்தம், பெருமாள் பற்றி சொல்வதை விருப்பமாக கேட்பார்.
இன்றைய தலைமுறையினருக்கு அவர் கூறுவது ஆன்மீகம் தான் வெற்றி பெறும். இந்த கலியுகத்தில் நாடும், வீடும் நன்றாக இருக்க வேண்டுமானால் சேவை மனப்பான்மை வளர வேண்டும்.

பக்தியும், சேவையுமே நாட்டுக்கு நல்லது செய்யும். ஆண்டாள் கூறியதைப் போல் வாயினால் பாடி மனதினால் சிந்திக்க வேண்டும். பக்தி மார்க்கம் ஒன்றே சிறந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு இவை இரண்டையும் தவறாது கற்றுக் கொடுக்க வேண்டும்.

அரியாளும் அரியணையில் ஒரு நரி ஆளும் என்று கீதையில் சொல்லி இருப்பதால், கலியுகத்தின் தாக்கத்தை குறைக்க வேண்டுமெனில் நாம் தர்மங்களும் நல்ல காரியங்களுமே செய்ய வேண்டும் என்கிறார் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர்.

3

Leave A Reply

Your email address will not be published.