புத்தாண்டு கொண்டாட்டம்: திருச்சி மாநகர காவல்துறை எச்சரிக்கை

0

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2020 ஆம் ஆண்டு பிறப்பையொட்டி இன்று இரவு திருச்சி மாநகரில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சந்தா 2

மதுஅருந்திவிட்டு குடிபோதையில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில், அதிக எண்ணிக்கையில் அமா்ந்து கொண்டு, பொறுப்பற்ற முறையில் அதிவேகமாக செல்லக்கூடாது. ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கி, பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், கேலி செய்தல் உள்ளிட்ட சட்டத்தை மீறும் செயலில் எவரும் ஈடுபடக்கூடாது. மாநகரில் அனைத்து காவல் நிலையங்களுக்குட்பட்ட இடங்களில் ரோந்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

‌சந்தா 1

வாகன தணிக்கையில் 50 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். இதற்காக, அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கூடுதலாக ஆட்கள் நியமிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபடுவா். புத்தாண்டு கொண்டாட்டம் எனும் பெயரில் எவரேனும் இடையூறு செய்தால் திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர தொலைபேசி எண் 100, நுண்ணறிவுப்பிரிவுக்கு 0431 2331929, 9498100615 எனும் தொலைபேசி, செல்லிடப்பேசி எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம். அதேபோல், காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மூலமும் தகவல் அளிக்கலாம் என மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.