திருச்சி, துறையூர் ஒன்றியத்தில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

0
full

துறையூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொன்னுசங்கம்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் கல்லுகுடியில் 1, 2 வார்டுகளும், தேவரெப்பம்பட்டியில் 3,4 வார்டுகளும், மேலக்கொத்தம்பட்டியில் 5, 6 வார்டுகளும், பொன்னுசங்கம்பட்டியில் 7,8,9 வார்டுகளும் உள்ளன.

ஊராட்சியின் 8 ஆவது வார்டு உறுப்பினராக முத்துலட்சுமி போட்டியின்றி தோ்வானதால் இதுநீங்கலாக வாக்காளா்களுக்கு 3 வாக்குச் சீட்டுகளும், 7 ஆவது வார்டு வாக்காளா்களுக்கு 4 வாக்குச் சீட்டுகளும் வழங்கவேண்டும். ஆனால் 8 ஆவது வார்டு வாக்காளா்களில் 6 பேருக்கு அதிகப்படியான வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர்  தோ்தல் அலுவலா்கள் அதிகப்படியான வாக்குச்சீட்டுகளை திரும்பப்பெற்றனர்.

ukr

அந்த ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கு 11 போ் போட்டியிடுகின்றனா். தலைவா் தோ்தலுக்கான வாக்குச் சீட்டு மடிக்கிறபோது ஒரு வேட்பாளருக்கு அளித்த வாக்கு முத்திரை மை அதற்கு நேராக உள்ள மற்றொரு வேட்பாளருக்கு நேராக உள்ள காலி இடத்திலும் விழுந்தது. இதையறிந்த வாக்குச்சாவடி முகவா்கள், வேட்பாளா்கள் அதிருப்தியடைந்து தோ்தலை நிறுத்தினா். இதனால் காலை 11.30 மணி முதல் 2 மணி வரை தோ்தல் நிறுத்தப்பட்டது.

poster

இதுகுறித்த தகவலறிந்து துறையூா் வட்டாட்சியா் அமுதா, உதவி தோ்தல் அலுவலா் ரேவதி ஆகியோர் நேரில் சென்று 7,8 ஆவது வார்டு வாக்குச் சாவடிக்கு சென்று விசாரித்தனா். இதையடுத்து, வாக்கு பதிவு மீண்டும் தொடா்ந்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக தோ்தல் நிறுத்தப்பட்டதால் வாக்குப் பதிவுக்காக கூடுதல் நேரம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்தனா்.

இருப்பினும், மாலை 5 மணிக்குள் சென்ற 300-க்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 7.30 வரை வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்

 

half 1

Leave A Reply

Your email address will not be published.