தன்னிச்சையாக செயல்பட்ட தேர்தல் அலுவலர் மாற்றம்

லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அப்பாத்துரை ஊராட்சி வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த முதியவா்களுக்கு உதவியாக உடன் வந்தவா்களை அனுமதிக்காமல், தோ்தல் பணியில் ஈடுபட்ட பெண் அலுவலா் வாக்களிக்கும் முதியவா்களிடம் குறிப்பிட்ட சின்னத்தில் வாக்களிக்கமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் தாய் புவனேஸ்வரி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க கூறியும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வைத்து விட்டதாக அவா் தனது மகனிடம் கூறியுள்ளார்.

இது குறித்து வேட்பாளா், மண்டல தோ்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய அவா், தன்னிச்சையாக செயல்பட்ட பெண் தோ்தல் அலுவலரை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக உபரியில் இருந்த அலுவலரை நியமித்தார். தொடா்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
