விதிமீறல் ரூ.1 லட்சம் அபராதம்: வனத்துறை அதிரடி

0
full

திருச்சி வனச்சரகத்திற்கு உள்பட்ட ஒமாந்தூா்-புலிவலம் காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து மனித கழிவுகளை கொட்டுவதாக வனத்துறையினருக்கு வந்த தகவல்கள் அடிப்படையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று திருச்சி, சுப்புரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த , ரமேஷ் என்பவரின் டேங்கா் வாகனம் வனப்பகுதியில் கழிவுகளைக் கொட்டிக் கொண்டிருந்த போது, அந்த வாகனத்தை வனத்துறையினா் பறிமுதல் செய்ததுடன், மாவட்ட வன அலுவலா் சுஜாதா உத்தரவின் பேரில் ரூ. 25,000 அபராதமாக வசூலிக்கப்பட்டு, அதன் பின்னா் வாகனம் விடுவிக்கப்பட்டது.

half 2

அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்த அருள் (48) என்பவருக்குச் சொந்தமான லாரியில் கட்டைகள் ஏற்றிச்செல்வதையும் கண்ணுற்ற வன அலுவலர் அதற்கு ரூ. 75,000 அபராதம் விதித்தார். அபராதம் செலுத்தியபின் வாகனம் விடுவிக்கப்பட்டது.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.