திருச்சி கே சாத்தனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு தாமதம் பொதுமக்கள் அவதி 

0
D1

திருச்சி கே சாத்தனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு தாமதம்

பொதுமக்கள் அவதி

கேகே நகர்

D2
N2

திருச்சி கே கே நகர் பழனி நகர் பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு, பிறப்பு, இறப்பு பதிவு, உயில் பதிவுகள் போன்ற ஆவணங்கள் பதியப்பட்டு வருகிறது மேலும் வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்கு இந்த அலுவலகத்தை பொதுமக்கள் அணுகி வருகின்றனர்

இந்தநிலையில் தினந்தோறும் காலை 10 மணிக்கு துவங்கும் பத்திரப்பதிவானதுஅலுவலகத்தில்  இன்று நண்பகல் 12 மணி வரை துவங்கவில்லை

இதற்கான அதிகாரிகள் பணிக்கு விடுப்பு எடுத்து வராத காரணத்தினால் பத்திரப் பதிவானது தாமதமானது.   மேலும் 10 மணிக்கு துவங்க வேண்டிய பத்திர பதிவானது இரண்டரை மணி நேரம் தாமதமாக பன்னிரண்டு  மணிக்கு துவங்கியது:   இதனால் பதிவிற்கு வந்த பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.   மேலும் அலுவலகத்தில் போதிய அலுவலர்கள் இல்லாத காரணத்தினால் ஓட்டுப்பதிவுக்கு சென்ற அலுவலர்கள் மீண்டும் பணிக்கு வருமாறு அழைக்கப்பட்டனர் அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் பத்திர பதிவிற்காக திருவரம்பூர் அலுவலகத்திலிருந்து மாற்று அதிகாரி கே.சாத்தனூர் அலுவலகத்திற்கு வந்து பத்திரப்பதிவு சுமார் நண்பகல் 12  மணி அளவில் துவங்கினார் இதுகுறித்து மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த போதும் எந்தவிதமான தகுந்த பதில்களும் வரவில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்-

 

N3

Leave A Reply

Your email address will not be published.