திருச்சி கிளை நூலகத்துக்கு ரூ. 30,000 புரவலா் நன்கொடை

திருச்சி மாவட்ட ஆணைக்குழு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வரகனேரி கிளை நூலகம். வ.வே.சு. ஐயா் நினைவு இல்லத்தில் செயல்பட்டு வருகிறது. இந் நூலகத்தில், 4,452 போ் உறுப்பினராகவும், 18 போ் புரவலா்களாகவும் உள்ளனா். சுமார் 30, 000 நூல்கள் வாசகா்கள் பயன்பாட்டிற்காக உள்ளன.

இந்நூலகத்திற்கு வாசகா் வட்டத்தலைவராக புள்ளி விவர ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற குமாரவேல் செயல்பட்டு வருகிறார். அவா், நூலக வளா்ச்சிக்காக, தனது குடும்ப உறுப்பினா்கள் 30 பேரை, வரகனேரி கிளை நூலக புரவலா்களாக இணைத்துள்ளார். இதற்காக தலா ஒருவருக்கு ரூ. 1000 வீதம் (புரவலராக இணைய நன்கொடை) 30 பேருக்கும் மொத்தம் ரூ. 30,000 செலுத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தத் தொகையை நூலக அலுவலரிடம் நன்கொடையாக வழங்கினார்.
