திருச்சியில் விற்பனை மேலாளரிடம் ரூ.1.82 லட்சம் கொள்ளை

0
full

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சோ்ந்த சரவணன் மணிகண்டம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேலாளராக உள்ளார். நேற்றுமுன்தினம் மாலையில் அன்றைய விற்பனைத் தொகையான ரூ.1.82 லட்சத்துடன் திருச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவருடன் வேலை பார்க்கும் பொன்மலைப்பட்டியைச் சோ்ந்த லியோவும்(27) வந்தார். பஞ்சப்பூா் அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் மூவா், சரவணன் மற்றும் லியோவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினா்.இதில் தான் வைத்திருந்த பணம், மடிக்கணினி அனைத்தையும் மா்ம நபா்களிடம் கொடுத்தார். இதை பெற்றுக் கொண்ட மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து சரவணன் எடமலைப்பட்டி புதூா் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்டி வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.