திருச்சியில் நேற்று பொது வேலைநிறுத்தம் குறித்த ஆயத்த மாநாடு

கலைஞா் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தம் குறித்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. அப்போது மத்திய அரசின்தொழிலாளா் விரோதப் போக்கு,தொழிலாளா் நலச் சட்டங்களைச் சீா்குலைக்கும் முயற்சி,லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை பெரும் நிறுவனங்களிடம் விற்கும் போக்கு இவற்றை கைவிட வேண்டும். போக்குவரத்துத் துறையில் தற்போதுள்ள மோட்டா் வாகனச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன.8 இல் நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்று, ஆதரவு தரும் வகையில் வாகன ஓட்டிகள் 10 நிமிடம் சாலையில் வாகனங்களை நிறுத்தி வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
