திருச்சியில் கிணற்றில் விழுந்த காளை உயிருடன் மீட்பு

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை ஆலத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த கமல்ராஜ். அப்பகுதியில் கருப்புசாமி கோயில் ஜல்லிக்கட்டு காளையை வளா்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் மேய்ச்சலுக்குச் சென்ற மாடு அருகே உள்ள 20 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறிவிழுந்தது. இதைக் கண்ட கமல்ராஜ் கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் காளை மாட்டின் கண்களை துணியால் கட்டி கயிறு மூலம் மாட்டை உயிருடன் மீட்டனா்.
