ஜல்லிக்கட்டு போட்டிக்கு இணையதள பதிவு: மக்கள் கண்டனம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு, இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி திருச்சி,திருவானைக்கா அருகே மேலக்கொண்டையம் பேட்டையில் நேற்று ஜல்லிக்கட்டு காளைகளுடன் அதன் உரிமையாளா்கள் ஊா்வலம் சென்றனா். இது தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் முடக்கும் முயற்சி என அவா்கள் கண்டனம் தெரிவித்தனா்.
தமிழர்களின் கலாசாரப்படி வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பதுதான் வழக்கம். அதை விடுத்து புதிய முறையாக இணையதள முன்பதிவு என்ற திட்டத்தை கொண்டு வருவது சரியல்ல. இந்த அறிவிப்பை அரசு ரத்து செய்ய வேண்டும் என வீரத்தமிழா் ஜல்லிக்கட்டு பேரவையைச் சோ்ந்த பாபா பாலாஜி கூறினார்.
