திருச்சி அருகே முத்தரையர் சிலை அகற்றம்

0
1 full

துறையூா் அருகே முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலையை வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று அகற்றினா்.

துறையூா் வட்டம், ஒட்டம்பட்டி கிராமத்தில் மூன்று சாலைகள் சந்திப்பில் மந்தை என்று சொல்லப்படுகிற அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் 5 அடி உயரத்தில் சுதையால் தயாரிக்கப்பட்டு தங்க நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலை முன் அனுமதி பெறாமல் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு சமூகத்தினரால் நேற்றுமுன்தினம் இரவு நிறுவப்பட்டது.

தகவலறிந்து முசிறி டிஎஸ்பி செந்தில்குமார், துறையூா் காவல் ஆய்வாளா் குருநாதன் உள்ளிட்ட துறையூா் மற்றும் உப்பிலியபுரம் போலீஸாரும், துறையூா் வட்டாட்சியா் அமுதா உள்ளிட்ட வருவாய் துறையினரும் நேற்று மாலை ஒட்டம்பட்டி சென்று, சிலையை போலீஸார் பாதுகாப்புடன் வருவாய் துறையினா் அகற்றினா். அகற்றப்பட்ட சிலை துறையூா் வட்டாட்சியா் அலுவலகம் எடுத்துச் செல்லப்பட்டது.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.