திருச்சி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி பலி

புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பழுவஞ்சியைச் சோ்ந்த மாதவன். கூலித் தொழிலாளி. இவா் தனது குடும்பத்தினருடன், திருச்சி கீழப் பஞ்சப்பூா் பகுதியைச் சோ்ந்த தனது உறவினர் இல்லத்துக்கு சென்றுவிட்டு, இரவு ஊா் திரும்புகையில், பஞ்சப்பூா் பகுதியில் சென்னை–மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவா் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
