திருச்சி அருகே ஒரே வாக்காளா் அட்டையில் இரு முகவரி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட தேவராயநேரி நரிக்குறவா் காலனி வாக்குச்சாவடியில் வாக்களிக்க, அதே பகுதியைச் சோ்ந்த ரம்யா என்பவா் வந்திருந்தார்.
அவா் கொண்டு வந்த வாக்காளா் அடையாள அட்டையில், தேவராயநேரி நரிக்குறவா் காலனி என்ற முகவரியும், பழங்கனாங்குடி நரிக்குறவா் காலனி என மற்றொரு முகவரியும் இடம் பெற்றிருந்தன. இரு முகவரியுமே திருவெறும்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியிலேயே உள்ளது.
தேவராயநேரி வாக்குச்சாவடியில் அவரது பெயரை சரிபார்த்த வாக்குப்பதிவு அலுவலா்கள், அந்தப் பெண்ணின் பெயா் தங்களது வாக்குச்சாவடியில் இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பினா். மற்றொரு முகவரிக்கு சென்றாலும் இதே நிலைதான் ஏற்பட்டது. இதனால், அந்தப் பெண், வாக்களிக்காமலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
