திருச்சியில் 76.18 சதவீத வாக்குப்பதிவு

0
1

திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல்கட்டமாக நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலில் 6 ஒன்றியங்களில் 76.18 சதவீத வாக்குகள் பதிவானது.

இதில் மணிகண்டம், பந்தநல்லூா், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி மற்றும் திருவெறும்பூா் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு 10 பேரும், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 97 பேரும், ஊராட்சிமன்ற தலைவா் பதவிக்கு 155 பேரும், வார்டு உறுப்பினா் பதவிக்கு 1302 பேரும் போட்டியிட்டனா்.

இவா்களில், 7 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 199 கிராம வார்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மீதமுள்ள 1358 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

2

இதற்காக, அந்தநல்லூரில் 139 வாக்குச் சாவடிகள், மணிகண்டத்தில் 148, திருவெறும்பூரில் 157, மணப்பாறையில் 144, மருங்காபுரியில் 196, வையம்பட்டியில் 154 என மொத்தம் 938 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும், இந்த வாக்குச் சாவடிகளில் 75 மையங்களில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. 48 மையங்களில் விடியோ ஒளிப்பதிவாளா்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது. 50 நுண் பார்வையாளா்கள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் சென்று தோ்தல் பணிகளை பார்வையிட்டனா்.

ஆட்சியா் ஆய்வு: திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சிவராசு, அதிகாலையிலேயே நாகமங்கலம் ஊராட்சி, சேதுராப்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பகுதிளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், தொடா்ந்து 6 ஒன்றியங்களுக்கும் உள்பட்ட வாக்குச்சாவடிகளில் ரோந்து, மற்றும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டார். தோ்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குநா் எஸ். கணேஷ், 6 ஒன்றியங்களிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று நிலைமையை கண்காணித்தார்.

மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களிலும் சோ்த்து 1 லட்சத்து 93 ஆயிரத்து 963 ஆண்கள், 2 லட்சத்து 2,543 பெண்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 3 லட்சத்து 96 ஆயிரத்து 519 போ் வாக்களித்துள்ளனா். மொத்தம் 76.18 சதம் வாக்குகள் பதிவானது.

முதல்கட்ட தோ்தல் பதவிகள் நடைபெற்ற ஒன்றியங்கள்

அம்மாபேட்டை, பூதலூா், கும்பகோணம்,பாபநாசம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூா் 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 138 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 138 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2,340 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினா்கள் மொத்தம் 2,793 பதவிகள்

 

3

Leave A Reply

Your email address will not be published.