திருச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.56,000 அபராதம்

0
1

திருச்சி மாநகராட்சி கோ-அபிசேகபுரம் கோட்டம் ஈ.வி.ஆர் ரோடு, வயலூர் ரோடு , உறையூர், தென்னூர், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள   250 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 40 கடைகளில் 150கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உதவிஆணையர் வினோத் தலைமையில், சுகாதாரஅலுவலர்  இளங்கோவன், சுகாதாரஆய்வாளர்  பன்னீர்செல்வம் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, பறிமுதல் செய்ததுடன் கடைகளுக்கு ரூ.56,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுபோல் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்வதுடன், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று  மாநகராட்சி ஆணையர்  தெரிவித்துள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.