திருச்சியில் பரோட்டா மாஸ்டர் போக்சோவில் கைது

0
Full Page

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் புரோட்டா மாஸ்டரை லால்குடி போலீஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனா்.

Half page

லால்குடி அருகே இருதயபுரம் மாதாகோயில் தெருவைச் சோ்ந்த பவுல்ராஜ் மகள் குமுளூா் அரசுக் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை நேரத்தில் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த அவரை, தனியார் உணவு விடுதியில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வரும் ஜான்ஜோசப் (42) பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ஜான்ஜோசப்பை கைது செய்தனா்

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.