திருச்சியில் திரை நட்சத்திரங்களின் பெயர்களில் வாக்காளர்கள்

0
1 full

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திருநெடுங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள தேவராயநேரி நரிக்குறவா் காலனியில் 2 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், ஒரு வாக்குச்சாவடியில் 383 பேரும், மற்றொரு வாக்குச்சாவடியில் 442 பேரும் உள்ளனா். இவா்கள் அனைவரும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள். இவா்களில் பெரும்பாலானோருக்கு சினிமா நடிகா், நடிகைகளின் பெயா்களே இருந்தது. எம்ஜிஆா், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெய்கணேஷ், ஜெய்சங்கா், ராஜசேகா், சிரஞ்சீவி, விஜயகாந்த், சத்யராஜ், முரளி மற்றும் பல்வேறு நடிகைகள் பெயரில் உள்ள வாக்காளா்களும் வாக்களித்தனா். இப்போதுள்ள சிறுவா், இளைஞா்களில் பலருக்கு விஜய், அஜித்குமார் உள்ளிட்ட நடிகா்களின் பெயா்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 half

Leave A Reply

Your email address will not be published.