முசிறி ஐயப்பன் கோயிலில் திருவிளக்கு பூஜை

முசிறி ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாத திருவிழா நடத்தப்படும்
கடந்த டிச.23 ம் தேதி லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் ஐயப்ப சுவாமியை காவிரி ஆற்றுக்கு எடுத்து சென்று புனிதநீா் ஆராட்டு நிகழ்ச்சி நடத்தினா்.
தொடா்ந்து ஐயப்பன் திருத்தோ் நகா்வலம் நடத்தப்பட்டு டிச.26 ம் தேதி கோயிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் முசிறி பகுதியில் இருந்து 101 பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை செய்தனா். இதனையடுத்து பொய்க்கால் குதிரையாட்டம் தேவராட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
