திருச்சி லால்குடி அய்யன் வாய்காலில் ஆண் சடலம்

0
1

லால்குடி அருகே இடையாற்றுமங்களம் ஊராட்சி மேலவாழை பகுதியை சேர்ந்த மார்டின்(28), ஒரு தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி ஜெயகலா.

உள்ளாட்சி தேர்தலுக்காக தனது கிராமத்திற்கு வந்த மார்டின் நேற்று முன் தினம் வீட்டைவிட்டு தேர்தல் வேலைக்கு தனது ஆதரவாளர்களுடன் இவர் சென்றுள்ளார். வெளியே சென்ற தனது கணவர் இரவு வரை வரவில்லை என ஜெயகலா தனது உறவினர்களுடன்தேடியுள்ளார்.
நேற்று காலை இடையாற்றுமங்களம் அய்யன்வாய்க்காலில் மார்டின் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே லால்குடி சப்.இன்ஸ்பெக்டர் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று மார்டின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மார்டின் மனைவி ஜெயகலா கொடுத்த புகாரின் பேரில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த மார்டின் தடுமாறி வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவரை அடித்து கொலை செய்து வாய்க்காலில் வீசப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.