திருச்சி அருகே விவசாயிகள் போராட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காட்டூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் விவசாயிகள் வாங்கிய கடன் தொகைக்கு மேல் கூடுதலாக வங்கி மேலாளர் கையொப்பமிட்டு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் ரூ. 18 கோடி வரை மோசடி செய்த வங்கி மேலாளரை கைது செய்ய வலியுறுத்தியும், 2015 முதல் 2018 வரை பயிர் கடன்களுக்காக விவசாயிகள் வங்கியில் அடகு வைத்த நகைகளை ஏலம் விடுவதை கண்டித்தும் வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்ததைத் தொடர்ந்து வங்கி மேலாளர் மீது வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது விவசாயிகள் பயிர் கடனுக்காக அடகு வைத்த நகைகளை திருப்பிக் கொள்ள ஜனவரி மாதம் இறுதிவரை கால அவகாசம் தருவது என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த உறுதியை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.
