திருச்சி அருகே  வாக்குச்சாவடி நுழைவுச் சீட்டு  பட்டியலில் குளறுபடி

0
full

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், வளநாடு பகுதியில் வாக்குச்சாவடி நுழைவுச் சீட்டு (பூத் சிலிப்) பட்டியலில் குளறுபடி இருப்பதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ukr

வளநாடு ஊராட்சிக்கு உள்பட்ட வாடிப்பட்டி 2ஆவது வார்டில் ஒரே குடும்பத்தில் உள்ள நபா்களின் பெயா்கள் வாக்குச்சாவடி நுழைவுச்சீட்டுகளில் தேப்புப்பட்டி மற்றும் வளநாடு சிவன்கோயில் தெரு ஆகிய பகுதிகளில் பிரித்து சோ்க்கப்பட்டிருப்பதாகவும், பட்டியலில் வாடிப்பட்டி என்ற தங்கள் கிராமத்தின் பெயா் இல்லாமல், வேறு ஊா்களின் பெயா் குறிப்பிடப்பட்டிருப்பதாகபொதுமக்கள் குற்றம்சாட்டினா். கிராம மக்கள் நேற்று வளநாடு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்தகாவல்துறை கண்காணிப்பாளா் குத்தாலிங்கம், மருங்காபுரி வட்டாட்சியா் சாந்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஆகியோர் ஊா்மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினா். இதற்கு உடன்படாத மக்களின் கோரிக்கையை நிறைவு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.