திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான போட்டிகள்

0
D1

23வது தேசிய இளைஞர் விழாவினை முன்னிட்டு  மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 03.01.2020 அன்று அண்ணா விளையாட்டரங்கம் திருச்சியில் நடைபெறவுள்ளது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 13-25 வயதிற்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிருக்கு மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் தேர்வுப்போட்டிகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  திருச்சி  பிரிவு மற்றும் நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து வருகின்ற 03.1.2020 அன்று காலை 8.00 மணி முதல் அண்ணா விளையாட்டரங்கில் நடத்த உள்ளது.

நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப்பாட்டு, ஓரங்க நாடகம் (ஆங்கிலம் அல்லது ஹிந்தி), கர்னாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், பேச்சுப் போட்டி, ஹார்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சிதார், கிடார், தபேலா, மணிப்புரி நடனம், பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக் மற்றும் ஒடிஸி நடனங்களுக்கு தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளது.

D2

அனைத்து போட்டிகளும் காலை 8-00 மணிக்கு துவக்கப்படும். தாமதமாக வரும் ஆடவர் மற்றும் மகளிர் பங்கேற்க அனுமதிக்க இயலாது.

N2

13-25 வயதிற்குட்பட்டவர் கலந்து கொள்ளலாம்.தங்களது பிறப்புசான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நபர் ஒரு பிரிவில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். • தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான தேர்வு போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.  23வது தேசிய இளைஞர் விழா உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் எதிர் வரும் 12.01.2020 முதல் 16.01.2020 வரை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு:

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 

அண்ணா விளையாட்டரங்கம்,

திருச்சிராப்பள்ளி -620023 (போன் 0431 – 2420685)

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிமாவட்ட ஆட்சியர்  தெரிவித்துக் கொள்கிறார்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.