திருச்சி அருகே நரேந்திரமோடிக்கு கோவில்

0
1

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் விவசாயி. , எரகுடி விவசாய சங்க தலைவர் மற்றும் பா.ஜனதா தொண்டர்.அவர் தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பினார்.  அதனால் தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்து பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வருகிறார்.

4

விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு, கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது, கோவில் கட்டி முடித்துவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டினேன் என்றார்.

3

Leave A Reply

Your email address will not be published.