திருச்சி அருகே அதிமுக வேட்பாளரின் மாமனாரை கொல்ல முயற்சி

0
D1

தேர்தல் போட்டி காரணமாக வையம்பட்டி அருகே அ.தி.மு.க. வேட்பாளரின் மாமனாரை நள்ளிரவில் கழுத்தை நெரித்து கொல்ல மர்ம கும்பல் முயற்சி செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த மேற்குகல்பட்டி பகுதி 14வது வார்டில் போட்டியிடுபவர் சுந்தரவள்ளி. இவருடன் இவரது மாமனார் ஸ்ரீரங்கனும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

N2

நேற்று முன்தினம் இரவு தேர்தல் பணிகளை முடித்த பின், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் கதவு தட்டப்பட்டது. எழுந்து கதவை திறந்தபோது, அங்கு பதுங்கி இருந்த மர்ம கும்பல், அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவருடைய கழுத்தை கயிற்றால் நெரித்து கொல்ல முயன்றது. அதற்குள் வீட்டில் இருந்த நாய்கள் குரைத்து சத்தம் போட்டன. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எழுந்து வந்தனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. அருகில் இருந்தவர்கள்
ஸ்ரீரங்கனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

D2

தேர்தல் போட்டி காரணமாக ஸ்ரீரங்கனை கொலை செய்ய முயன்றனரா? அல்லது வேறுஏதும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.