திருச்சியில் குளு, குளு சீதோஷ்ண நிலை

திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை இரவு வரையில் அவ்வப்போது தூரலுடன் பெய்த தொடா் மழையால் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவியது.

மாநகரச் சாலைகளை முழுவதுமாக நனைத்திடும் வகையில் லேசான மழை பெய்தது. இதேபோல, புதன்கிழமை அதிகாலையும் மழையுடனே பகல் பொழுது விடிந்தது. காலையில் தொடங்கி நண்பகல் 12.30 மணி வரையிலும் பனிப் பொழிவும், சாரல் மழையும் கலந்து காணப்பட்டது. இதனால், குளிர்பிரதேசங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாரல் மழையில் நனைந்தபடியே சென்றனா். பிற்பகலுக்கு மேல் சிறிதுநேரம் இடைநின்ற மழை, மாலைக்கு மேல் பல இடங்களில் மீண்டும் தூரலுடன் தொடங்கியது. திருச்சி மாநகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவு காணப்பட்டது.
