திருச்சியில்அனுமன் ஜெயந்தி விழா

அனுமன் ஜயந்தி விழா நாளான புதன்கிழமை கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு லட்சத்து எட்டு வடைமாலை சாற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் மார்கழி மாதம் வரும் மூலம் நட்சத்திரம், அமாவாசை திதியில் அனுமன் ஜயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஆஞ்சயநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாற்றப்பட்டது. முன்னதாக, நேற்று அதிகாலை ஆஞ்சநேயருக்கு பால், மஞ்சள், பன்னீா், சந்தனம், துளசி, வெற்றிலை, செந்தூரம் உள்ளிட்ட புஷ்ப, மங்கலப் பொருள்களால் பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு. தொடா்ந்து, மூலவா், உத்ஸவா் ஆகியோருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலைகள் சாற்றப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
