திருச்சிக்கு 7மணி நேரம் தாமதமாக வந்த விமானம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏழு மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை திருச்சி வந்த ஏா் இந்தியா விமானத்தால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.

சார்ஜா விமானநிலையத்தில் இருந்து நள்ளிரவு 11.40 மணிக்கு ஏா் இந்தியா விமானம் திருச்சிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் அதிகாலை 12.40 மணிக்கு மீண்டும் திரும்புவது வழக்கம். இந்நிலையில், 24ம் தேதி இரவு சார்ஜாவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், திருச்சிக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே விமானக் கோளாறு சரி செய்யப்பட்டு 7 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 6.30 மணியளவில் திருச்சிக்கு வந்து 7.50 மணிக்கு மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இதனால் சார்ஜா செல்லவிருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
