கலைப் பண்பாட்டு போட்டியில் பாரதிதாசன் பல்கலை.ஒட்டுமொத்தசாம்பியன்ஷிப்

அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் சார்பில் தென் மண்டல அளவிலான கலைப் பண்பாட்டு போட்டிகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 18ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடந்தது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் குறுநாடகம், ஊமை நாடகம், நாட்புப்புற நடனம், நாட்டுப்புற இசைக்கருவிகளின் சங்கமம், வண்ணக் காகிதத் துண்டுகளால் கருத்தோவியம் உருவாக்குதல் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
இவற்றில் ஒட்டுமொத்த நாடகப் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தையும், நாட்டுப்புற நடனப்பிரிவில் 2ம் இடத்தையும் மற்ற 2 போட்டிகளில் 3ம் இடத்தையும் பெற்று அடுத்து தேசிய அளவில் நொய்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அகில இந்திய போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை துணைவேந்தர் மணிசங்கர், பதிவாளர் கோபிநாத், தேர்வு நெறியாளர் துரையரசன் ஆகியோர் வாழ்த்தினர்.
