திருச்சி மீன் மார்கெட் பணிகள்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

0
gif 1

 

திருச்சி மாநகராட்சி கோ/அபிசேகபுரம் கோட்டம் உறையூர் 60வது வார்டு குழுமணி ரோடு, காசிவிளங்கி பாலம் அருகில்  மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் 1.50 ஏக்கர் பரப்பளவில்  கட்டப்பட்டுவரும் மீன் மார்கெட் பணிகளை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், நகரப்பொறியாளர் அமுதவல்லி மற்றும் பொறியாளர்களுடன் நேற்று ஆய்வுசெய்தார்.

gif 4

புதிதாக கட்டப்படும் மீன்மார்கெட் 6905.23 சதுர அடியில் 25 சில்லறை சந்தையுள்ள கடைகள் , 3948.92 சதுர அடியில் 7 மொத்த விற்பனை நிலையங்கள், ஏ.டி.எம் சென்டர், கழிவறை, குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் போன்ற அம்சங்கள் அமைக்கப்படுகிறது. இதனை ஆய்வுசெய்த ஆணையர் விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என கூறினார்.

gif 3

மேலும்  புத்தூர்  பகுதியில் காய்கறி மற்றும் மீன் மார்கெட்  இயங்கிவரும் பழைய கடைகளை அப்புறபடுத்தி சீர்மிகு நகரத்திட்டத்தில் புதிதாக 54757 சதுர அடி பரப்பளவில் மாநகராட்சிக்கு வருவாய் பெருக்கும் வகையில் புதிய வணிக வளாகம் அமைக்கும் இடத்தையும் ஆணையர் சிவசுப்பிரமணியன், நகரப்பொறியாளர் அமுதவல்லி மற்றும் பொறியாளர்களுடன் நேற்று ஆய்வுசெய்தார்.   இப்பணி புதிதாக கட்டப்படும் மீன்மார்கெட் மாற்றம் செய்த உடன் பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.