திருச்சி மாவட்ட ஊரக பகுதியில் தேர்தல் அன்று பொது விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசு ஆணை (MS) எண் 184 நாள்(24.12.2019) ன் படி முதல் கட்ட தேர்தல் நடைபெறும். 6 ஊராட்சி ஒன்றியங்களில் (27.12.2019) அன்றும், இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும். 8 ஊராட்சி ஒன்றியங்களில் (30.12.2019) அன்றும், பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி ஊராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்த ஒரு நபரும் பிற நகர் புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனம், தொழிற்சாலை, வணிக நிறுவனம் மற்றும் அனைத்து விதமான பணியமைப்புகளில் (Establishment) பணியாற்றினால் அந்த நபருக்கு அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
எந்த ஒரு நிறுவனமும், தேர்தல் நடைபெறும் நாள் அன்று விடுப்பு அளிக்க தவறினால் பிரிவு 80 (ஏ) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்; 1994 ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரகப்பகுதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
