திருச்சி மாவட்டம் , கே.பெரியப்பட்டி வார்டு எண் : 2ல் தேர்தல் நிறுத்தம்

0
D1

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், கே.பெரியப்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண் : 2 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் மட்டும் மாநில தோதல் ஆணையத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

கடந்த 19ம் தேதியன்று  உள்ளாட்சி தேர்தலில் படிவம் 9-ன்படி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்ட மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், கே.பெரியப்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண்.2 –ல்  சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட பெரியசாமி (வயது 60) , உடல்நலக்குறைவால் 21ம் தேதி இறந்தார். அதனால் 27.12.2019 அன்று நடைபெறவிருந்த வார்டு எண்.2-க்கான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் மட்டும் தமிழ்நாடு மாநில தெர்தல் ஆணைய சட்டப்பூர்வ ஆணை.113/TNSEC/2019/PE-I  ன்படி,  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இத்தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அவ்வூராட்சியில்,  வார்டு எண்.2 ல் உள்ள வார்டு உறுப்பினர் தேர்தல் தவிர, ஏனைய 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலும், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி,  27.12.2019 அன்று  நடைபெறும் என மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலரும், ஆட்சியருமான சிவராசு தெரிவித்துள்ளார்.

N3

Leave A Reply

Your email address will not be published.