திருச்சி ஊரக உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக உள்;ளாட்சி தேர்தல் திருச்சி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 2275 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அங்குபணியாற்றக்கூடிய 18279 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கடந்த 15.12.2019, 22.12.2019 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.

நேற்று வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் மற்றும் பிற துறையை சார்ந்த அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் போது வாக்கு எண்ணும் அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய பணிகள் குறித்து செயல்முறை வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று பயிற்சி நடைபெற்ற 14 ஊராட்சி ஒன்றியங்களில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் குறிஞ்சி பொறியியல் கல்லூரி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் ஸ்ரீ மீனாட்சி விடியல் மெட்ரிகுலேசன் பள்ளி, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஆதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
