ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி  சிறப்பு ஏற்பாடுகள்

0
full

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு, தலைமையில் 23ம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழா 26.12.2019 தொடங்கி 16.01.2020 வரை நடைபெற உள்ளது. இதன் முக்கிய நாளான சொர்க்க வாசல் திறப்பு 06.01.2020 அன்று அதிகாலை நடைபெற உள்ளது. இத்திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்துத் துறைகளையும்  ஒருங்கிணைத்து இக்கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.

poster
half 2

ஸ்ரீரங்கம் பேருந்து நிறுத்தம்,, சுகாதார ஏற்பாடுகள், குடிநீர் வசதி, நடமாடும் கழிவறைகள், மின்விளக்கு வசதி, பொதுமக்கள் தங்கும் வசதி, ஜெனரேட்டர் வசதி,     முக்கிய நாட்களான 05.01.2020 முதல் 07.01.2020 வரை கோயிலில் சிறப்பு இரயில் வண்டிகள் இயக்கவும், அனைத்து விரைவு ரயில் வண்டிகளையும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், கூடுதலான இடஒதுக்கீடு பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.     தீயணைப்புத் துறையின் சார்பில் முன்னெச்சரிக்கையாக ஆலயத்தினுள் தகரப் பந்தல் மற்றும் தீயணைப்பு வாகனத்தினை நிறுத்தி வைக்கப்படும். இத்துறையின் மூலம் கூடுதல் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திட வேண்டும்

வருகின்ற 05.01.2020 முதல் 07.01.2020 வரை பொதுமக்கள் அவசர தேவைக்கு இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் மற்றும் 24 மணி நேரமும் மருத்துவ முகாம்களும் நடைபெறும். அரசு மருத்துவமனையில்  மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் உடன் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்திடவும், நெரிசலை கட்டுப்படுத்திடவும் காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவல் துறையினர் அறிவிக்கும் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுசெய்து தரமான உணவு வகைகள் வழங்க வேண்டும். உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவதையும், கூடுதல் விலையில் விற்பனை செய்வதை தடுத்திடும் பொருட்டும், விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள், பழங்கள் ஆகியவற்றில் ரசாயன கலவை கலக்கப்பட்டுள்ளதா என கண்டறியும் பொருட்டும், குழுவாக பணியாளர்களை அமைத்து உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.