ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பக்தர்களின் உடைமைகள் சோதனை

0
gif 1

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்ய வெள்ளை கோபுர நுழைவு வாயிலில் ஸ்கேனர் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

gif 4

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் தீவிரவாதிகள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

கோயிலின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்டும் வருகின்றனர். இதில் ரெங்கா ரெங்கா கோபுரம் வழியே வரும் பக்தர்களை மெட்டல் டிடெக்டர் மூலமும், உடைமைகளை ஸ்கேனர் மூலமும் சோதனை செய்து வருகின்றனர். இதில் வெள்ளை கோபுரம் வழியே மெட்டல் டிடெக்டர் மட்டுமே இருந்து வந்தது. தற்போது வெள்ளை கோபுரம் வழியே செல்லும் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்ய ஸ்கேனர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த ஸ்கேனர் கருவி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து வெள்ளை கோபுரம் வழியே செல்லும் அனைத்து பக்தர்களின் உடமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை நடத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.