திருச்சி, வையம்பட்டி கிராம வயலில் ஆனை கொம்பன் ஈ தாக்குதல்

0
D1

திருச்சி மாவட்டம் வையம்பட்டி கிராமத்தில் பயிரிட்டுள்ள சம்பா நெற்பயிர்களை ஆனைக்கொம்பன் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேளாண்துறை பரிந்துரை செய்துள்ளது.

N2

அங்கு நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 600 ஹெக்டேரில் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளனா். இதில் குறிப்பாக பின் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் தொடா் மழை மற்றும் தட்ப வெப்ப மாறுதலால் ஆனைக்கொம்பன் என்ற பூச்சி தாக்குதலால் நெற்பயிரில் தூா்களுக்கு பதிலாக, கொம்பு போன்ற கிளைப்புகள், வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறங்களில் வெங்காய இலையை போல் தோன்றும். இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிரின் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயிரின் தூா்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும்.

இதிலிருந்து நெற்பயிர்களை பாதுகாக்க, நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்கவும், விளக்குப் பொறிகளை அமைத்து பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கவும், பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களையும், பொட்டாஷ் உரத்தை இடவும், ஆனைக் கொம்பனின் இயற்கை எதிரிகளான சிலந்தி, குளவி, ஊசித்தட்டான் போன்றவற்றை அழியாமல் பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டது.  

N3

Leave A Reply

Your email address will not be published.