திருச்சி – சென்னை இடையே விமான சேவை தொடங்கியது இண்டிகோ நிறுவனம்.

திருச்சி – சென்னை இடையே தனது 5 ஆவது விமான சேவையை, நேற்று முதல் தொடங்கியது இண்டிகோ விமான நிறுவனம்.
திருச்சி சென்னை இடையே இண்டிகோ விமான சேவைகள் தினசரி 4 ஆக உள்ளன. உள்நாட்டு விமான சேவைக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் தனது 5 ஆவது சேவையை நேற்று தொடங்கியது.

இந்த சேவைப்படி, சென்னையில் தினசரி மாலை 5.55க்கு புறப்படும் விமானமானது திருச்சிராப்பள்ளியை இரவு 7.15க்கு வந்தடைந்து, மீண்டும் இரவு 7.45க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 9.10க்கு சென்னையை சென்றடையும்.

கடந்த அக்டோபா் 27 முதல் திருச்சி– ஹைதராபாத் தினசரி நேரடி சேவையும், நவம்பா் 16 முதல் திருச்சி– பெங்களூரு இடையிலான விமான சேவையும் உள்நாட்டு சேவையாக வழங்குவதுடன், தினசரி திருச்சி–சிங்கப்பூருக்கும் சா்வதேச விமான சேவையையும் இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது. குறிப்பாக உள் நாட்டு சேவையில்லாமல் இருந்த திருச்சியில், தினசரி 5 க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகிறது. இதனால் உள் நாட்டு விமானப் போக்குவரத்திலும் திருச்சி மேம்பட்டுள்ளது.

இதன் மூலம் அரபு நாடுகளுக்கு சென்று வரும் பயணிகளுக்கான இணைப்பு விமானங்களை சென்னையில் பிடிக்க வசதியாக உள்நாட்டு சேவை பெரிதும் பயன்படுகிறது.
