திருச்சி அருகே ஜல்லிக்கட்டுக்காளைகளுக்கு தீவிர பயிற்சி

0
1

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இணையாக திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியிலும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும். குறிப்பாக ஆவாரங்காடு, பொத்தமேட்டுப்பட்டி, செவலூர், கருங்குளம் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது சிறப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு 1½ மாதத்துக்கு முன்பிருந்தே தீவிர பயிற்சி அளிக்கப்படும். அந்த வகையில் மணப்பாறை ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு, வழக்கமாக கொடுக்கப்படும் உணவுகளை விட சத்தான உணவு பொருட்கள் கொடுக்கப்பட்டு நீச்சல் பயிற்சி
நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் மற்றும் மண்ணை கொம்பால் குத்தி கிளறும் பயிற்சி, அருகில் யாரையும் நெருங்க விடாமல் விரட்டும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மணப்பாறை செவலூர் பகுதியில் சின்னாக்கவுண்டர் என்பவர் 20-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வைத்துள்ளார்.. இவற்றிற்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பதை நேற்று காலை சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள்  கண்டு வியப்படைந்தனர்.

2

இதுகுறித்து சென்னை திருவேற்காடு சதீஸ் என்ற இளைஞர் கூறுகையில், நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கிறோம்.. தற்போது முதல் முறையாக நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பயிற்சியை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சென்னை வாழ் மக்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டியின் வீரம் பற்றி தெரியும் என்றார்

3

Leave A Reply

Your email address will not be published.