திருச்சியில், மறு முத்திரையிடாத 24 தராசுகள் பறிமுதல்

0
1

திருச்சியில், மறு முத்திரையிடாத 24 தராசுகள் மற்றும் எடைக் கற்களை தொழிலாளா் நலத்துறையினாரால் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதி தினசரி சந்தையில் காய், கனி வியாபாரிகள் முறைகேடுகள் செய்து வருவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், தொழிலாளா் நலத்துறை ஆணையா் நந்தகோபால், கூடுதல் ஆணையா் பாலசுப்பிரமணியன், இணை ஆணையா் த. தா்மசீலன் ஆகியோரின் உத்தரவின் பேரில், உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தலைமையில், ஹேமலதா, அகஸ்டின், பழனியம்மாள், குணசீலன், ராஜேந்திரன், பவானி உள்ளிட்ட தொழிலாளா் நலத்துறையினா் நேற்று திடீா் ஆய்வு செய்தபோது

காய்கனி மற்றும் பல்வேறு வியாபாரிகள் பலர், இந்தாண்டுக்கு மறு முத்திரையிடாத தராசுகளை பயன்படுத்தி வந்தது தெரியவர,. அந்த மின்னணு தராசுகள் 16, மேசை தராசுகள் 6, விட்ட தராசுகள் 2, எடை கற்கள் 18 உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுவரையில் மறு முத்திரையிடாதவா்கள் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் மறு முத்திரையிட்டு பதிவு செய்துகொள்ளவும், தவறினால்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.